பேருந்துகளில் பணம் இல்லாமல் செயலி மூலம் கட்டண முறை

சென்னை: தமிழ்­நாட்­டில் மே 17க்குப் பிறகு பொதுப் போக்­கு­வரத்து பேருந்துகளை நடத்­து­வ­தற்­கான ஆயத்­தப் பணி­களை அர­சாங்­கம் செய்து வரு­கிறது.

கொரோனா கிரு­மிப் பர­வு­வதைத் தடுக்­கும் வகை­யில் பொது போக்­கு­வ­ரத்தை நடத்த வேண்­டும் என்­ப­தற்­காக பல பரிந்­து­ரை­கள் அர­சிடம் தாக்­க­லாகியிருக்­கின்­றன.

பேருந்து ஒவ்­வொன்­றி­லும் 50 விழுக்­காட்­டுப் பய­ணி­கள்­தான் பயணம் செய்ய வேண்­டும்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு, துப்­பு­ரவு ஊழி­யர்­க­ளுக்குத் தனி சேவை­கள் நடத்­தப்­பட வேண்­டும். பேருந்­து­களில் பணம் வசூ­லிப்­ப­தற்­குப் பதி­லாக கைபேசி செய­லி­கள் மூலம் கட்­ட­ணம் செலுத்­தும் முறை பின்­பற்­றப்­பட வேண்­டும் என்­றெல்­லாம் வல்­லு­நர்­கள் பரிந்­து­ரை­களை முன்­வைத்து இருக்­கி­றார்­கள்.

இவற்­றோடு பேருந்­து­களில் எங்கு எங்கு பய­ணி­கள் அமர வேண்­டும் என்­பதைத் தெளி­வாக குறிப்­பி­டும் ஏற்­பா­டு­கள் இருக்க வேண்­டும். முகக்­க­வ­சம், கைகழுவும் திர­வம் கட்­டா­யம் என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

பய­ணி­க­ளி­டம் கூகல் பே, பேடிஎம் போன்ற செய­லி­கள் மூலம் கட்­ட­ணம் வசூ­லிக்­கும்­படி பேருந்து நடத்­து­நர்­க­ளி­டம் தெரி­விக்­கப்­பட்டு இருக்­கிறது. இதற்­கான சுற்­ற­றிக்­கை­கள் அனுப்­பப்­பட்டுள்ளன. பயணி­கள் மாதாந்­திர பயண அட்டை­க­ளை­யும் ஒரு நாள் பயணம் செய்­யக்கூடிய கட்­டண அட்­டை­களையும் வாங்கி அவற்­றின் மூலம் பயணம் செய்­யும்­படி ஊக்­கு­விக்­கப்­ ப­டு­வார்­கள் என சென்னை போக்கு வரத்துக் கழ­கம் தெரிவித்தது.

பல நாட்­க­ளாக பேருந்­து­கள் இயங்­கா­மல் பணி­ம­னை­க­ளி­லேயே நிறுத்­தப்­பட்டு இருந்­த­தால் அவற்­றின் பல பாகங்­களும் கெட்­டுப்போய் இருக்­கக்­கூ­டும் என்­ப­தால் அவற்றைச் சரிப்­ப­டுத்­து­வ­தற்­கான பணிகள் தொடங்­கி­விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!