கொவிட்-19: இலங்கையில் பாதிக்கப்படாத தமிழர்கள்

கொழும்பு: வியாழக்கிழமை நள்ளிரவு நிலவரப்படி இலங்கையில் புதிதாக 27 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 24 பேர் கடற்படை வீரர்கள் என்று இலங்கை தொற்றுநோய் தடுப்பு மையம் தெரிவித்தது. இவர்களையும் சேர்த்து இலங்கையில் 824 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை என்று கொவிட்-19 கிருமிப் பரவல் தடுப்புக் குழுவின் தலைவரும் ராணுவ தளபதியுமான லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வ தெரிவித்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மக்களில் சிலர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் ஆயினும் அவர்களிடம் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும் தமிழர்கள் திரளாக வசிக்கும் பகுதிகளில் சமூக அளவிலான கிருமிப் பரவல் அடையாளம் காணப்படவில்லை என்றும் தமிழர்களின் சுகாதாரப் பராமரிப்பை முப்படையினர் நல்ல முறையில் கவனித்து வருவதாகவும் திரு ஷவேந்திர குறிப்பிட்டார்.

இரண்டு மாதம் என்னும் குறுகிய காலப் பகுதிக்குள் கிருமித்தொற்றை இலங்கை அரசாங்கம் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“நாடு முழுவதும் 42 தனிமைப்படுத்தும் மையங்களை முப்படையினர் ஏற்படுத்தி உள்ளனர். அவற்றில் 5,442 பேர் தனிமைப் படுத்தி வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!