மதுக்கடைகளை மூட உத்தரவு; தமிழக அரசு மேல்முறையீடு

தமிழகத்தில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட இரண்டே நாட்களில் அவற்றை இம்மாதம் 17ஆம் தேதி வரை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை எதிர்த்து பலர் வழக்குத் தொடுத்தனர். மதுக்கடைகள் திறக்கப்படுவதை எதிர்த்து பல இடங்களிலும் பெண்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால், மதுக்கடைகளைத் திறக்கத் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், அதே நேரத்தில் பாதுகாப்பான இடைவெளி உட்பட பல நிபந்தனைகளைப் பின்பற்றவேண்டும் என உத்தரவிட்டது.

ஆயினும், நிபந்தனைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, அதற்கான சான்றுகளையும் இணைத்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் 17ஆம் தேதி வரை மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்றும் மாறாக இணையம் வழியாக விற்பனை செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, திமுக, தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என கோரின.

இதனிடையே, ‘மதுக்கடைகளைத் திறப்பது என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் தலையிடக்கூடாது’ எனக் குறிப்பிட்டு, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!