மதுவால் அரங்கேறிய கொலைகள்

தமிழகத்தில் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டதும் போதையில் பல கொடூர கொலைகளும் அரங்கேறின.

ஊரடங்கால் கடந்த ஒன்றரை மாத காலமாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் குற்றச் செயல்கள் குறைந்தன. இந்த நிலையில், கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து, மதுபோதை தலைக்கேறிய நிலையில் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பல கொலைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கீழக்கண்டமங்கலத்தைச் சேர்ந்த கணேஷ்பாபு, 23, என்ற இளையர், உடன்பிறந்த தன் 20 வயது தங்கையைக் கட்டையால் அடித்துக் கொன்றார். அதே ஊரைச் சேர்ந்த இளையர் ஒருவரை அந்த இளம்பெண் காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காமல் கணேஷ்பாபு அவரைக் கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. தப்பியோடிவிட்ட அவரை போலிசார் தேடி வருகின்றனர்.

இதேபோல், நீலகிரி மாவட்டத்தில் போதையில் சண்டையிட்ட இருவரை விலக்கிவிடச் சென்ற விஜயன் என்ற தொழிலாளியும் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டார். உயிரிழந்த விஜயனுக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

சேலம் மாவட்டம், சக்கரை செட்டியபட்டி ஊராட்சியில் போதையில் அதிவேகத்தில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களைத் தட்டிக்கேட்ட விஷ்ணுபிரியன் என்ற இளையர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த அவருடைய தம்பியும் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாகப்பட்டினம் அருகே 70 வயது முதியவரை மரத்தச்சர் ஒருவர் போதையில் கொன்றுவிட்டார். அந்த முதியவர் சம்பள நிலுவைத்தொகை வைத்திருந்ததால் தான் அவரைக் கொலை செய்துவிட்டதாக அந்தத் தச்சர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் கோவையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் சேர்ந்து மது அருந்தியபின் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, உடற்பயிற்சி செய்ய வைத்திருந்த ‘டம்பிள்சை’ எடுத்து ஒருவர் அடித்ததில் இன்னொருவர் பலியானார்.

பரமக்குடியில் 25 வயது இளையர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். கரூர் மாவட்டம், நெரூரில் இருவர் கொலை செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி அருகே இளையர் ஒருவர் போதையில், வீட்டு வாயிலில் இருந்த கதவில் ஏறிக் குதிக்கிறேன் என்று முயற்சி செய்ததில் வேல் போன்று மேலே நீட்டிக்கொண்டிருந்த கம்பி அவரது உடலைக் குத்திக் கிழித்தது. பின்னர் தீயணைப்புத் துறையினர் வந்து அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

இவற்றுடன், மதுபோதையில் சாலையை மறித்து இடையூறு ஏற்படுத்துதல், சாக்கடையில் விழுதல் என பல சம்பவங்கள் அரங்கேறியதாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!