கணவர் உடலுடன் விமானத்தில் வந்த மனைவி

துபாய்: துபாயிலிருந்து சென்னை திரும்பிய 182 பயணிகளில் சென்னையைச் சேர்ந்த 29 வயது கொள்ளம்மாளும் ஒருவர். அவரது கணவர் குமாரின்(35) உடலும் அதே விமானத்தில் சென்னை வந்தடைந்தது என்று தமிழக ஊடகமான தினமணி தெரிவித்தது.

துபாயில் ராஸ் அல் கைம்மாவில் இயங்கி வரும் தனியார் நிறு வனத்தில் தரக்கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாக குமார் பணியாற்றி வந்தார். ஏப்ரல் 13ஆம் தேதி பணியின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

“காலை உணவை சாப்பிட்டு விட்டு பணிக்குச் சென்றார். காலை 10 மணி அளவில் அவர் பணி யாற்றும் வளாகத்தில் இருந்து காவ லாளி ஓடி வந்து கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். அங்கு அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவ மனையில் அவரைப் பார்க்க அனு மதிக்கப்படவில்லை. பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டதாக என்னி டம் கூறினர்,” என்று கொள்ளம்மாள் கண்ணீரோடு கூறினார்.

குமார்-கொள்ளம்மாள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் துபாய் சென்றனர்.

“இதுவரை எங்குமே நான் தனியாகச் சென்றது இல்லை. இன்று வாழ்க்கையிலேயே என்னை தனியாகவிட்டு விட்டுச் சென்று விட்டார். இதுதான் நான் தனியாகப் பயணிக்கும் முதல் பயணம். யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது” என்று மேலும் அவர் சொன்னார்.

இவருடன் 200 தொழிலாளர்கள், 37 கர்ப்பிணிகள், குழந்தைகள், 42 மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் என இரண்டு ஏர் இந்தியா விரைவு விமானம் மூலம் சுமார் 360 பயணிகள் துபாயில் இருந்து சென்னை வந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!