பல மாநிலங்களிலும் சிக்கிக்கொண்ட தமிழக மக்களை அழைத்துவர சிறப்பு ஏற்பாடு ரயில்கள் மூலம் 13,000 தமிழர்கள் வருகிறார்கள்

சென்னை: இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறு தொழில்துறைகளில் அதிக எண்ணிக்கையில் பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா கிருமித்தொற்று காரணமாக திடீரென பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பல மாநிலங்களிலும் சிக்கிக்கொண்டனர். அவர்களில் பலர் வேலை இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் திரும்பி வர விரும்பினாலும் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களால் சொந்த ஊருக்கு வர முடியவில்லை.

இந்நிலையில், புலம்பெயர்ந்து இருக்கும் தொழிலாளர்களைச் சிறப்பு ரயில்களிலும் பேருந்துகளிலும் அவரவர் ஊர்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதித்தது.

அதன்படி பல மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டினரை அழைத்துவர 10 சிறப்பு ரயில்கள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 1,200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று ரயில் மூலம் திருச்சி வந்தனர். அதேபோல இன்று குஜராத்திலிருந்து இரண்டு ரயில்கள் தமிழகம் வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் இருந்து தமிழர்களை ஏற்றிக்கொண்டு சிறப்பு ரயில் இன்று புறப்படும் என்றும் மேற்கு வங்காளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை அழைத்து வர இரண்டு சிறப்பு ரயில்கள் இயங்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சு சனிக்கிழமை அறிவித்தது.

மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் மூலம் சுமார் 13,000 தமிழர்கள் அடுத்த வாரத்திற்குள் தமிழ்நாடு வந்து சேர்வர் எனத் தெரிகிறது

மகாராஷ்டிராவில் இருந்து திருச்சி வந்த தமிழர்களுக்கு உணவு, குடிநீர், முகக்கவசம் எல்லாம் ரயில் நிலையத்திலேயே வழங்கப்பட்டன. அங்கிருந்து அவர்கள் 30 அரசாங்கப் பேருந்துகள் மூலம் அவரவர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பேருந்துகளிலும் ரயில் நிலையங்களிலும் அவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் போன்ற கொரோனா நோய்த்தடுப்புக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் தமிழர்களுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களைப் போல வெளிநாடுகளில் இருந்தும் தமிழர்கள் தாயகம் திரும்பி வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!