சென்னையில் கிருமிப் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் சனிக்கிழமை மேலும் 526 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535ஆக அதிகரித்துவிட்டது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி ராதா

கிருஷ்ணன் நேற்று ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “சென்னையில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை வைத்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

“கோயம்பேடு சந்தைப் பகுதியிலும் வடசென்னையிலும் கூடுதலாக 19 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாகப் பரிசோதனை செய்து வருகிறோம். நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பிக்க பரிசோதனைகளைச் சரிவர செய்வதில்லை என்று கூறப்படுவது தவறு.

“நாள்தோறும் கன்காணித்து குறைந்தபட்சம் 3,500 பேரை பரிசோதிக்கிறோம். அதனால் அடுத்த 5, 6 நாட்களுக்கு கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகம். மொத்தம் 52 பரிசோதனை மையங்கள் உள்ளன. சென்னையில் அதிகமானோரைப் பரிசோதிக்கிறோம்.

“சென்னையில் குடும்பங்களில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். இதில் பலருக்கும் அறிகுறிகள் இல்லை, இது நல்ல செய்தி. பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ள நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், மூச்சுத்திணறல் உள்ளவர்கள், முதியவர்கள் ஆகியோரை அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தி வருகிறோம்.

“அடுத்த ஒரு வார காலத்திற்கு கிருமித்தொற்று எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். கோயம்பேடு சந்தை மூலம் பாதிக்கப்படுவது இப்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், வடசென்னை, திருவான்மியூர் சந்தைகளில் இப்போது பாதிப்புகள் காணப்படுகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!