கொவிட்-19: 53 பேர் பலி; 8 ஆயிரம் பேருக்கு பாதிப்பு சென்னை மாநகரில் அதிகரிக்கும் பாதிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித்தொற்று ஒரே நாளில் 6 பேரைப் பலி வாங்கி உள்­ளது. மாநி­லம் முழு­வ­தும் கிரு­மித் தொற்று பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 8 ஆயி­ர­மாக அதி­க­ரித்­துள்­ளது.

கடந்த 10 நாட்களில் மட்டும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 3 மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் புதி­தாக 798 பேருக்கு நோய்த்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட செய்­திக்­கு­றிப்­பில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 8,002 ஆக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் கொவிட்-19 நோயி­லி­ருந்து இதுவரை 2,057 பேர் முழு­மை­யாக குண­ம­டைந்­துள்­ள­னர் என்­றும் அந்த அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதற்கிடையே சென்னையில் கொரோனா கிருமித் தொற்றின் தாக்கம் மேலும் வலுத்து வருகிறது. சென்னையில் கிருமித்தொற்றியோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 538 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

சென்னையில் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா கிருமி பாதிப்பால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 பெண்கள் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருமித்தொற்று இல்லாத திருப்பூர்

கொரோனா கிருமித்தொற்று இல்லாத மாவட்டம் என திருப்பூர் பெயரெடுத்துள்ளது. திருப்பூரில் 114 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருப்பது சில தினங்களுக்கு முன்பு உறுதியானது. இதையடுத்து அனைவரும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதன் பலனாக 112 பேர் முழுமையாகக் குணமடைந்தனர். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவர்களும் குணமடைந்து வீடு திரும்பினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!