கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை நன்றியுடன் கறி விருந்து

கோவை: கொரோனா கிரு­மித் தொற்­றின் பிடி­யி­லி­ருந்து பொது­மக்­க­ளைக் காப்­பாற்ற தூய்­மைப் பணி­யா­ளர்­கள் இடை­வி­டா­மல் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். இந்­நி­லை­யில் அவர்­க­ளைப் பாராட்டி நன்றி தெரி­விக்­கும் வகை­யில் கோவை­யில் கறி­வி­ருந்து பரி­மா­றப்­பட்­டது.

பீள­மேடு அருகே உள்ள தண்­ணீர்ப்­பந்­தல் பகு­தி­யில் நூற்­றுக்­கும் மேற்­பட்ட தூய்­மைப் பணி­யா­ளர்­கள் கடந்த 3 மாதங்­க­ளுக்­கும் மேலாக விடு­மு­றை­யின்றி பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.

தங்­கள் உயி­ரை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் சேவை­யாற்றி வரும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளைப் போற்­றும் வித­மாக அப்­ப­குதி மக்­கள் நேற்று முன்­தி­னம் கறி­வி­ருந்­துக்கு ஏற்­பாடு செய்­த­னர்.

இதை­ய­டுத்து அறு­ப­துக்­கும் மேற்­பட்ட தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு விருந்து பரி­மா­றப்­பட்­டது. மேலும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் அப்­ப­குதி மக்­கள் பொன்­னாடை போர்த்தி மரி­யாதை செய்­த­னர்.

இதேபோல் கோவை மாவட்டம் போத்தனூர் பகுதியிலும் கொரோனா கிருமித்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டி அப்பகுதி மக்கள் சேலைகளைப் பரிசளித்தனர்.

மேலும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு அவர்கள் மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இவ்வாறு மாநிலம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்மணி தமது வீடு அமைந்துள்ள பகுதியில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு பாதபூசை செய்தார். இதையடுத்து காஞ்சிபுரத்திலும் ஒரு குடியிருப்பைச் சேர்ந்த பலர் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதபூசை செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!