பேருந்துகளில் 25 பேருக்கு மட்டும் அனுமதி

சென்னை: இம்மாதம் 17ஆம் தேதிக்குப் பிறகு 50 விழுக்காடு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கிற்குப் பின் தமிழகத்தில் பேருந்துகளை இயக்கத் தயாராக இருக்கும்படி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இயக்கப்படும் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய 25 வழிமுறைகள் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஒரு பேருந்தில் 25 பேரை மட்டுமே ஏற்ற வேண்டும் என்றும் அவர்களில் 20 பேர் இருக்கைகளில் அமரவும் ஐவர் நின்றபடி பயணம் செய்யவும் அனுமதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

ஓட்டுநர், நடத்துநருக்கு முகக் கவசம், கிருமிநாசினி, கையுறை வழங்கப்படும். முகக்கவசம் அணியாத பயணிகளைப் பேருந்தில் ஏற்றக்கூடாது. பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் பாதுகாப்பான இடைவெளிவிட்டு நிற்கும் விதமாக வண்ணக் கோடுகள் வரையப்படும். தினமும் இருமுறை பேருந்தில் கிருமி நாசினி தெளிக்கவேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!