மக்கள் ஒத்துழைத்தால் கிருமிப் பரவலைத் தடுக்கலாம்: முதல்வர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்து வது மக்கள் கையில்தான் உள்ளது. மக்கள் முழுமையாக ஒத்துழைத்தால் கிருமிப் பாதிப்பை குறைத்து விடலாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தனிமனித இடைவெளி, முகக் கவசம் போன்றவற்றை பின்பற்றினால் கொரோனாவைக் கட்டுப் படுத்த முடியும் என்று கூறிய அவர், அரசின் அறிவுரைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10வது தளத்தில் இருந்து அவர் காணொளி வழியாக மாவட்ட ஆட்சியா்களுடன் பேசினார்.

மத்திய அரசால் மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்ட முடக்கம் இம்மாதம் 17ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் தமிழகத்தில்தான் கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் 0.67 விழுக்காடு என குறைந்து காணப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“தமிழகத்தில் ‘ரேஷன்’ மூலம் பொருட்கள் தங்குத் தடையின்றி கிடைத்து வருகின்றன. உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை. மக்களுக்கு உதவ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.மே மாதத்தை போல ஜூன் மாதத்திலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்,” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேலும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!