வியாபாரிகளின் பழங்கள், காய்கறிகளை சாலையில் கொட்டி, வீசிய ஆணையருக்கு பலர் கண்டனம்

வாணியம்பாடி: வாணியம்பாடியில் வியாபாரிகளின் பழங்களையும் காய்கறிகளையும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் சாலையில் கொட்டி, வீசும் காெணாளிக் காட்சி சமூக ஊடகங்களில் அதிவேக மாகப் பரவியதால் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக வாணியம்பாடி முடக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் பலர் பழங்களையும் காய்கறிகளையும் தொடர்ந்து விற்று வருகின்றனர்.

இதனால் பழக்கடைகளையும் தள்ளுவண்டி கடைகளையும் அகற்ற வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் விதிகளை மீறி வியா பாரிகள் பழங்களை விற்றதால் ஆணையர் ஆவேசமடைந்தார்.

தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை அவர் கீழே வீசி எறிந்தார். சில வண்டிகளை அப்படியே கொட்டி கவிழ்த்துவிட்டு அவர் சென்றார். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பழக்கூடைகளையும் அவர் வீதியில் சாய்த்தார்.

இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் வலைப் பதி வாளர்கள் அவரது செயலைக் கண்டித்துள்ளனர்.

ஆணையரின் காணொளிக் காட்சியை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட திமுக எம்.பி. கனிமொழி, வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத் தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.

“ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் வலியுறுத்திஉள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர் களைச் சந்தித்த ஆணையர் சிசில் தாமஸ், காய்கறி, பழ வியாபாரிகளை நாங்கள் பலமுறை எச்சரித்தும் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிவித்தார்.

“கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது போல் உருவாகிவிடக்கூடாது என்ற அச்சத்தால் நடவடிக்கை எடுத்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அதை செய்தோம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்காகத்தான் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். கடந்த ஒன்றரை மாதமாக இரவு பகலாக நாங்கள் கண்விழித்து கொரோனா தொற்று நோய் பரவாமல் இருக்க பாடுபட்டு வருகிறோம்,” என்று சிசில் தாமஸ் குறிப்பிட்டார்.

பின்னர் தமது செயல்களுக்கு அவர் வருத்தமும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!