நோயாளிகளை உற்சாகப்படுத்த நடனத்துடன் கூடிய உடற்பயிற்சி

சிங்கப்பூர் எக்ஸ்போவில் தங்கவைக்கப்பட்டு இருக்கும் கொவிட்-19 தொற்று நோயாளிகள் நாள்தோறும் இருமுறை கூட்டு உடற்பயிற்சிக்காக ஒன்றுகூடுகின்றனர்.

சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் ஒருவர் செய்துகாட்ட, அவரைப் பின்பற்றி ஊழியர்கள் அனைவரும் நடனமாடி, பயிற்சியில் ஈடுபடும் காணொளி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்த விவரத்தை உட்லண்ட்ஸ் சுகாதார வளாகம் நேற்று தெரிவித்தது.

தனிநபர் பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்தபோதும் அந்தச் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர் இசைக்கேற்றபடி ஆர்வத்துடன் நடனமாடுவதையும் அவர் செய்துகாட்டுவதைப் போலவே ஊழியர்களும் நடனத்துடன் கூடிய அந்தப் பயிற்சியில் ஈடுபடுவதையும் அந்தக் காணொளி காட்டுகிறது.

அத்துடன், அங்குள்ள மற்ற சில சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் உற்சாகத்துடன் நடனமாடுவதும் அந்தக் காணொளியில் தெரிகிறது.

நோயாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக தனது எக்ஸ்போ சுகாதாரப் பராமரிப்புக் குழு கடந்த திங்கட்கிழமையன்று பல்வேறு பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் தொடங்கியதாக உட்லண்ட்ஸ் சுகாதார வளாகத்தின் பேச்சாளர் தெரிவித்தார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சமூகப் பராமரிப்பு வசிப்பிடங்களில் தங்கவைக்கப்பட்டு, கிருமித்தொற்றில் இருந்து தேறி வரும் நோயாளிகளை உற்சாகமான மனநிலைக்குக் கொண்டுவந்து, அவர்களைத் துடிப்புடன் இருக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

“அத்தகையதொரு கூட்டு உடற்பயிற்சி வேளையைத்தான் அந்தக் காணொளி காட்டுகிறது. பதினைந்து நிமிடங்களுக்கு நீடிக்கும் அந்தக் கூட்டு உடற்பயிற்சி ஒரு நாளைக்கு இருமுறை நடத்தப்படுகிறது,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

இந்த முயற்சிக்கு நோயாளிகள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பயிற்சியின்போது நோயாளிகளின் உடல்நலத்தையும் மூச்சுவிடும் தன்மையையும் தமது சுகாதாரப் பராமரிப்புக் குழுவினர் கண்காணிப்பதாகவும் அந்தப் பேச்சாளர் சொன்னார்.

உடற்பயிற்சி முடிந்த பிறகு நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவும் சோதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இது எவருக்கேனும் அதிக மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறதா என்பதை அடையாளம் காண உதவுகிறது என்றும் தெரிவித்தார்.

“இந்த உடற்பயிற்சிகள் மூலம், நோயாளிகள் உடல்நலம் தேறி தங்குமிடங்களுக்குத் திரும்பிய பிறகும் அவற்றைத் தொடர்ந்து செய்யலாம் என்ற ஆரோக்கிய வாழ்க்கைமுறைக் குறிப்புகளையும் அவர்களிடம் ஏற்படுத்த முடியும் என்றும் நம்புகிறோம்,” என்றார் அவர்.

பாதுகாப்பு, கிருமித்தொற்று நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, அந்த ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் பாதுகாப்பு இடைவெளி விதிமுறை குறித்து அவ்வப்போது நினைவூட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!