கொவிட்-19க்குப் பிறகு முதலீடுகளைக் கவர மாநில அரசு பெருமுயற்சி தமிழகத்துக்கு இடம் மாறும் நிறுவனங்களுக்குச் சலுகை

சென்னை: கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்று ஒடுங்கியதும் பல அனைத்துலக நிறுவனங்கள் இங்கும் அங்கும் இடமாறுமென கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், அத்தகைய நிறுவனங்களைத் தமிழ்நாட்டுக்குக் கவர்ந்து ஈர்க்க அந்த மாநில அரசு ஊக்குவிப்புச் செயல்திட்டத்தைத் தீட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு இடம் மாறும் உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு இடமாற்ற ஊக்குவிப்பு வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் தொழில்துறை முதன்மைச் செயலர் என் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும் இந்தியத் தூதரகமும் சேர்ந்து ஏற்பாடு செய்த இணைய மாநாட்டில் பேசிய அவர், பல துறைகளிலும், குறிப்பாக தமிழக மின்னணுத் துறையில் உள்ள சவால்கள், வாய்ப்புகளை விளக்கினார்.

அந்த மாநாட்டில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் கலந்துகொண்டன.

இந்தியாவில் ஜப்பானிய நிறுவனங்கள் அதிகம் செயல்படும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் 620க்கும் அதிக ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

“இந்தியாவில் 2வது ஆகப் பெரிய பொருளியல் மாநிலமாக உள்ள தமிழகத்தின் கேந்திர முக்கிய அமைவிடம், தொழில் நடத்த உகந்த சூழல், உள் கட்டமைப்பு வசதிகள், அனுகூலமான சுற்றுப்புற சூழல், அரசாங்கத்தின் செயல்சார்ந்த அணுகுமுறை ஆகியவை எல்லாம் முதலீட்டாளர்களை அதிகம் கவர்கின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!