தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பு 10,000ஐ நெருங்குகிறது

சென்னை: தமிழ்நாட்டில் கோயம்பேடு சந்தை காரணமாக இதுவரைஏறக்குறைய 2,600 பேரை கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது என்றும் இது மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களில் சுமார் 35 விழுக்காடு என்றும் மாநிலத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அந்தச் சந்தையில் இருந்து கிருமி பரவுவதைத் தடுக்க முடியாமல் போய்விட்டதாக டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே, கோயம்பேடு சந்தையில் இருந்து ஆந்திரப்பிரதேசத்துக்குத் திரும்பிச் சென்ற 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் அச்சம் தலைதூக்கி இருப்பதாக தகவல்கள் கூறின.

மாநிலத்தில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி 9,227 பேரை கொரோனா கிருமி தொற்றி இருந்தது. 64 பேர் பலியாகிவிட்டார்கள். அவர்களில் 42 பேர் சென்னையில் பலியானார்கள். புதன்கிழமை மட்டும் 509 பேரை கிருமி தொற்றியது.

மருத்துவமனையில் 6,984 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,176 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் 10,000ஐ எட்டிவிடும் என்று அபாய சங்கு ஊதப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் சுமார் 2.6 லட்சம் மக்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாகவும் மரண அளவு 0.6 விழுக்காடாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

கொரோனா கிருமி தொற்றி இருப்போரில் 5,262 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். அந்த நகரின் குடிசைப் பகுதிகளில் கிருமிப் பரவலைத் தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்றும் டாக்டர் ஜே. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதனிடையே, ஊரடங்கில் முழு தளர்வு கூடாது என்றும் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்றும் அதிக அளவில் பரிசோதனைகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர் குழு தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது.

இந்தக் குழுவினர் முதல்வருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். ஜெனீவாவிலிருந்து டாக்டர் சௌமியா என்ற வல்லுநர் தெரிவித்த ஆலோசனையும் செவிமடுக்கப்பட்டது. பிறகு குழு தன் பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாடு திரும்பி வரும் தமிழர்களுக்குக் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

அனைவரும் 14 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அப்படி தமிழகம் திரும்புவோர் ஹோட்டல்களில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள விரும்பினால் அதற்கு ஆகும் செலவை அரசாங்கமே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!