கிருமித்தொற்று அதிகரிப்பதற்கு அரசாங்கமே காரணம் - அரசியல்வாதிகள் குறைகூறல்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கிருமித்தொற்று அதிகரிப்பதற்கு அரசாங்கமே காரணம் என்று அரசியல்வாதிகள் குறைகூறி இருக்கிறார்கள்.

தமிழக அரசு அலட்சியமாக நடந்துகொண்டதால்தான் கிருமித்தொற்று அதிகரித்துவிட்டது என்றும் மற்றவர்களின் மீது பழிபோடுவதை நிறுத்திக்கொண்டு கிருமியை அழிக்க ஆக்ககரமான முறையில் அரசு செயல்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அதேவேளையில், தமிழக அரசு கொரோனா கிருமியைக் கட்டுப் படுத்துவதில் கோட்டைவிட்டுவிட்டது என்றும் டாஸ்மாக் காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு மதுக்கடைககளைத் திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கடுமையாகச் சாடினார்.

இந்தியாவில் கொரோனா கிருமி தலையெடுத்து பரவி வந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு எட்டாவது இடத்தில் இருந்ததைச் சுட்டிக்காட்டிய கமல்ஹாசன், இப்போது இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது என்றார்.

முன்னேற்றத்தில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டிய தமிழகம், பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது என்றார் கமல்.

இதனிடையே, கொரோனா நிவாரணம் கேட்டு மனுக்களுடன் சென்றபோது திமுக எம்பிக்களைத் தமிழக தலைமைச் செயலாளர் அவ மதித்துவிட்டதாகவும் இந்த விவ காரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவிடம் கொண்டுசெல்லப்போவதாகவும் திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டிஆர் பாலு தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!