கொரோனா: 10 நாட்களுக்குப் பிறகு குறைந்தது; புதிதாக தொற்றிய 447 பேரில் சென்னையைச் சேர்ந்தோர் 363 பேர்

சென்னை: தமிழ்­நாட்­டில் 10 நாட்­க­ளாக அதி­க­ரித்து வந்த கொரோனா கிரு­மி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை முதல் முறை­யாக வியா­ழக்­கி­ழமை குறைந்­தது. அன்று புதி­தாக 447 பேரைக் கிருமி தொற்­றி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

அவர்­களில் 363 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள். நேற்­றுக் காலை 8 மணி நில­வ­ரப்­படி, மாநி­லத்­தில் மொத்­தம் 9,674 பேரை கொரோனா கிருமி தொற்றி இருந்­தது. 66 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

சென்­னை­யில் மட்­டும் 5,637 பேரை கிருமி தொற்றி உள்­ளது. மரண அளவு 0.67 விழுக்­கா­டு­. சேலம், கோவை இரு மாவட்டங்களிலும் கிருமி பாதிப்பு அறவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கிரு­மி தொற்றி இருப்­போ­ரில் சுமார் 60 விழுக்­காட்­டி­னர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள். தமிழ்­நாட்­டின் இதர பகு­தி­களுடன் ஒப்­பி­டு­கை­யில் சென்­னை­யில் கொரோனா கிருமி தொற்றி உள்ள பெண்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மாக இருக்­கிறது.

மாநி­லத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 34 விழுக்­காட்­டி­னர் பெண்­கள். இந்த அளவு சென்­னை­யைப் பொறுத்­த­வரை 40 விழுக்­கா­டாக இருக்­கிறது. இதனால் சென்­னை­யில் சமூ­கத் தொற்று கிளம்பி இருக்­க­லாம் என்று வல்­லு­நர்­கள் அனு­மா­னிக்­கி­றார்­கள்.

சென்­னை­யில் ராய­பு­ரத்­தில்­தான் பாதிப்பு அதி­க­மாக உள்­ளது. அங்கு 971 பேரை கிருமி தொற்றி இருக்­கிறது. அடுத்­த­டுத்த இடங்­களில் திரு­விக நகர், கோடம்­பாக்­கம், அண்­ணா­ந­கர், தண்­டை­யார்­பேட்டை, தேனாம்­பேட்டை ஆகி­யவை உள்­ளன.

இவ்­வே­ளை­யில், சென்னை உள்­ளிட்ட மாநி­லங்­களில் எல்லா பகு­தி­க­ளி­லும் மே 31 வரை ஊர­டங்­குக் கட்­டுப்­பா­டு­கள் நீட்­டிக்­கப்­ப­டக்­கூ­டும் என்­றும் சென்­னை­யில் கடும் கட்­டுப்­பா­டு­கள் தொடர்ந்து நடப்­பில் இருந்து வரும் என்­றும் தெரி­கிறது.

சென்­னை­யில் தொற்று அதி­க­மாக இருப்­ப­தற்கு கோயம்­பேடு சந்­தை­தான் கார­ணம் என்று கூறப்­பட்­டா­லும் முதன்­மு­த­லாக அங்கு வெளி மாநி­லங்­களில் இருந்தே கிருமி இறக்­கு­ம­தி­யா­னது. ஆகை­யால் இப்­போது தமி­ழ­கம் திரும்புவோர் தடுத்­து­வைக்­கப்­பட்டு கண்காணிக்­கப்­ப­டு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!