பொருளியலுக்குப் புத்துயிர்: தமிழக அரசு பெருந்திட்டம்

சென்னை: தமிழ்­நாட்­டில் கொரோனா தொற்று முடி­வுக்கு வந்­த­துமே பொரு­ளி­ய­லுக்­குப் பெரிய அள­வில் புத்­து­யிர் அளிக்­கும் வகை­யில் தமி­ழக அரசு பெரும் திட்­டம் ஒன்­றைத் தீட்டி வரு­கிறது.

ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்­தி­யா­வின் முன்­னாள் ஆளு­நர் சி. ரங்­க­ரா­ஜன் தலை­மை­யில் அமைக்­கப்­பட்ட உயர்­நிலை பொரு­ளி­யல் குழு வியா­ழக்­கி­ழமை கூடி­யது.

பொரு­ளி­யலை உசுப்­பி­வி­டு­வதற்­கான உத்­தி­களை வகுப்­ப­தற்­குத் தோதாக பல்­வேறு நில­வ­ரங்­க­ளை­யும் அந்­தக் குழு விவா­தித்­தது.

பொரு­ளி­ய­லுக்கு ஊக்­க­மூட்­டும் மாநில அர­சின் திட்­டம் ஒரு­பு­றம் இருக்க, மத்­திய அர­சாங்­கம் தமி­ழக அர­சுக்கு தர­வேண்­டிய ரூ. 20 லட்­சம் கோடி பொரு­ளி­யல் ஊக்கு­விப்­புத் தொகை விரை­வில் கிடைக்­கும் என்று தமி­ழக அரசு காத்து இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

முதல் நாள் கூட்­டத்­திற்­குப் பிறகு பேசிய திரு ரங்­க­ரா­ஜன், மாநி­லத்­தின் பொரு­ளி­யல் எந்த அள­வுக்­குப் பாதிக்­கப்­பட்டு இருக்கிறது என்பதை மதிப்­பிட வேண்­டிய தேவை இருக்­கிறது என்றார்.

“நீண்­ட­கால, குறு­கிய கால திட்­டங்­கள் தேவை. பொரு­ளி­யல் சீர­மைப்­பு­கள் பற்றி பல­வற்­றை­யும் விவா­திக்க வேண்டி இருக்­கிறது. பல வழி­க­ளை­யும் கண்­டு­பி­டிக்க வேண்டி இருக்­கிறது.

“கொரோனா கிருமித்தொற்­றின் தாக்­கம் எந்த அள­வுக்கு ஊர­டங்கு நீடிக்­கிறது என்­ப­தைப் பொறுத்­த­தாக இருக்­கும். ஊர­டங்கு கார­ண­மாக ஒவ்­வொரு துறை­யும் எந்த அள­வுக்­குப் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது என்­பதை ஆராய துணைக் குழுக்­கள் அமைக்­கப்­பட்டு இருக்­கின்­றன,” என்று அவர் தெரி­வித்­தார்.

தன்­னு­டைய குழு மூன்று மாத காலத்­திற்­குள் அறிக்­கையை மாநில அர­சி­டம் தாக்­கல் செய்­யும் என்று ரங்­க­ரா­ஜன் குறிப்­பிட்­டார்.

இடைக்­கால அறிக்­கை தேவைப்­பட்­டால் அத்­த­கைய ஓர் அறிக்­கை தாக்­க­லா­கும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மாநி­லத்­தின் பொரு­ளி­யலை ஊக்­கு­விக்க அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்­டு­களில் தேவைப்­ப­டக்­கூ­டிய நட­வ­டிக்­கை­கள் பற்­றி­யும் குறு­கிய கால நோக்­கத்திலான நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் குழு ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

தன்­னு­டைய உயர்­நி­லைக் குழு­வின் முதல் கூட்­டத்­தில் 24 உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­ட­தா­கக் கூறிய அவர், பொரு­ளி­ய­லைச் சீர­மைக்க அவ­சி­ய­மான அனைத்­தும் அடை­யா­ளம் காணப்­பட்டு பெரும் திட்­டம் உரு­வாக்­கப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

தன் குழு தொடர்ந்து கூடி பலவற்றையும் ஆராயும் என்று திரு ரங்­க­ரா­ஜன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!