மதுக் கடைகள் மீண்டும் இன்று திறக்கப்படுகின்றன

சென்னை: தமிழ்­நாட்­டில் டாஸ்­மாக் கடை­க­ளைத் திறக்க உச்ச நீதி­மன்­றம் அனு­ம­தித்து உள்­ளது. அத­னால் மதுக்­க­டை­கள் இன்று முதல் செயல்­படும் என தமி­ழக அர­சின் டாஸ்­மாக் நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 ஊர­டங்­கால் மூடப்­பட்­டி­ருந்த மதுக்­க­டை­களை தமிழகத்தில் 41 நாட்களுக்குப் பின் தமி­ழக அரசு கடந்த 7ஆம் தேதி திறந்­தது. ஆனால் கட்­டுப்­பா­டு­கள் பின்­பற்­றப்­ப­டா­த­தால் கடை­களை சென்னை உயர் நீதி­மன்­றம் அடுத்த நாளே மூடி­விட்­டது. இதை எதிர்த்து தமி­ழக அரசு உச்ச நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்­தது.

மனுவை விசா­ரித்த உச்ச நீதி­மன்­றம், உயர் நீதி­மன்­றத்­தின் உத்­த­ர­வுக்­குத் தடை விதித்­தது. இதை­ய­டுத்து புதிய கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னும் அதி­க­மான மதுவிநியோக முகப்புகளுடனும் மதுக்கடை­கள் இன்று முதல் இயங்­கும் என டாஸ்மாக் தெரிவித்தது.

இதுதவிர, ஒருவருக்கு 2 பாட்டில்களுக்கு மேல் விற்பனை செய்யக் கூடாது எனவும், மூன்று நாட்களுக்கு ஒரு முறையே ஒருவருக்கு மது விற்பனை செய்ய வேண்டும் எனவும் மது வாங்குபவரின் பெயர், முகவரி மற்றும் ஆதார் எண்களை பதிவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!