அமோனியா கசிவால் மக்கள் பீதி

சென்னை: உரத் தொழிற்சாலையில் இருந்து அமோனியா வாயு கசிந்த சம்பவம் சென்னைவாசிகளிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது.

அண்மையில் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் ஒரு வேதித் தொழிற்சாலையில் இருந்து நச்சுவாயு கசிந்ததில் பலர் மரணம் அடைந்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு சென்னை மணலியில் யூரியா தயாரிக்கும் பொதுத்துறை ஆலையில் இருந்து அமோனியா கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தூக்கத்தில் இருந்த மாத்தூர் எம்எம்டிஏ காலனிவாசிகள் பலருக்கும் கண்களில் எரிச்சலும் தோல் அரிப்பும் ஏற்பட்டன. அப்பகுதியில் துர்நாற்றமும் வீசியது. இதனால் பயந்துபோன மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்து, தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து அந்த காலனியின் செயலாளர் பாபு கூறுகையில், “இந்தப் பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. துவைத்துக் காயப்போட்டிருந்த துணிகளின் நிறமே மாறிவிட்டன. அந்த அளவிற்கு அமோனியா கசிந்துள்ளது. இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

தகவலறிந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். இப்போது, காற்றின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டாலும் மக்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!