நடப்போருக்காக, எல்லையை கடப்போருக்காக முகாம்கள் தமிழ்நாடு-ஆந்திரா எல்லை அடைப்பு; வெளிமாநிலத்தவருக்கு உதவ ஏற்பாடுகள்

சென்னை: கொரோனா கிருமித்தொற்றைத் தடுப்பதற்காக நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவில் லட்சக்கணக்கான உடல் உழைப்பு தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களிலும் அடைபட்டு கிடக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலும் வட, கிழக்கு இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை இல்லாமலும் தங்குமிட வசதி இன்றியும் அவதிப்படுவதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்புவதால் மத்திய, மாநில அரசாங்கங்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் அவர்களை அனுப்பி வைக்க முயற்சிகளைத் தொடங்கி இருக்கின்றன.

இருந்தாலும் போதிய அளவுக்குப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. அதேவேளையில் தங்குவதற்கு இடம் இல்லாமலும் உணவு இல்லாமலும் தொழிலாளிகள் குடும்பம் குடும்பமாக பரிதவிப்பதால் நூற்றுக்கணக்கானவர்கள் நடந்தே தங்கள் ஊர்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.

ஆனால் கிருமித்தொற்று அச்சம் காரணமாக தன்னுடைய எல்லைக்குள் அவர்களை அனுமதிக்க ஆந்திர அரசாங்கம் மறுத்துவிட்டது. அதை மீறி உள்ளே நுழைந்தவர்களை தமிழ்நாட்டுக்கே கொண்டுவந்து அது விட்டுவிட்டது.

இதனால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் குவிந்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர்களைத் தங்க வைப்பதற்காக எல்லை அருகே முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை நகர நிர்வாகம் இதற்கு ஏற்பாடு செய்து வருவதாக வும் அத்தகைய ஊழியர்களுக்கு உணவு முதலான தேவைகளை நிறைவேற்ற தொண்டூழிய அமைப்புகளைப் பணியில் அமர்த்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு-ஆந்திரா எல்லையை தாங்கள் அடைத்துவிட்டதாக தமிழக போலிசார் தெரிவித்தனர்.

எல்லை கடந்து செல்வோர் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் தற்காலிக முகாம்களுக்குத் திருப்பிவிடப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே, ரயில்கள் மூலமாகவும் பேருந்துகள் மூலமாகவும் வெளிமாநிலத்தவரைத் திருப்பி அனுப்ப அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பல விரைவு ரயில்களில் அவர்கள் ஏற்றி அனுப்பப்படுகிறார்கள். ஆதார் அட்டை முதலான பத்திரங்கள் சோதிக்கப்பட்டு வெளிமாநிலத்தவர் அனுப்பப்படுவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான ஊழியர்கள் குவிக்கப்பட்டு வருகிறார்கள்.

அங்கிருந்து இன்று பீகாருக்கு செல்லும் ரயிலில் 1,457 பேர் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இவ்வேளையில், தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருவதால் பல இடங்களிலும் கட்டுமானப் பணிகள் மறுபடியும் பரபரப்பாகத் தொடங்கி இருக்கின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்து வந்த கட்டுமானப் பணிகளில் ஆந்திராவைச் சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வந்தனர்.

இப்போது அங்கு பணிகள் மீண்டும் தொடங்கி இருப்பதால் ஆந்திர ஊழியர்களுக்கு ஆறுதல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!