தமிழகத்தில் 11,760 பேருக்கு பாதிப்பு; 16 மாவட்டங்களில் பாதிப்பு குறைந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,760ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா கிருமித் தொற்றில் இருந்து இதுவரை 4,406 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 7,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,272 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 1,077 பேருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

திரு.வி.க.நகரில் 835 பேர், தண்டையார்பேட்டையில் 610 பேர், தேனாம்பேட்டையில் 786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 நோய் உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றி­வ­தற்­கான மருத்­துவ பரி­சோ­தனை எண்­ணிக்கை குறைக்­கப்­ப­ட­வில்லை என்­றும், தேவைப்­ப­டு­வோ­ருக்கு பரி­சோதனை செய்­யப்­ப­டு­கிறது என்­றும் அவர் செய்­தி­யா­ளர்­கள் சந்திப்­பில் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 81 பேர் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்ட அவர், இறப்பு விகி­தம் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது என்­றார்.

நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் தமி­ழ­கத்­தில் 536 பேருக்கு கிரு­மித்­தொற்று இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இவர்­களில் 364 பேர் சென்­னை­யைச் சேர்ந்­த­வர்­கள் ஆவர்.

இதற்­கி­டையே திரு­வா­ரூ­ரில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரும் குண­ம­டைந்­ததை அடுத்து அம்­மா­வட்­டம் பச்சை மண்­ட­லத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

சென்­னை­யில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் அதி­க­ரித்­துள்­ள­தால் காய்­க­றிச் சந்­தை­க­ளுக்கு கட்­டுப்­பா­டு­கள் விதிக்க அரசு முடி­வெ­டுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சென்னை திரு­வான்­மி­யூர் காய்­க­றிச் சந்­தை­யில் ஒரு வியா­பா­ரிக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யான நிலை­யில், அவர் மூலம் நூற்­றுக்­கும் மேற்­பட்­டோ­ருக்கு தொற்று பர­வி­யுள்­ளது.

இதே போல் எம்­ஜி­ஆர் நகர் காய்­க­றிச் சந்­தை­யி­லும் வியா­பா­ரி­கள் இரு­வ­ருக்கு தொற்று கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இதையடுத்து அச்­சந்தை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டது.

இந்­நி­லை­யில் கிரா­மப்­புறப் பகு­தி­களில் நேற்று முதல் முடிதிருத்­தும் கடை­கள் இயங்­கத் தொடங்­கின. முடி திருத்­தும் பணி­யா­ளர்­கள் மற்­றும் வாடிக்­கை­யா­ளர்­கள் கண்­டிப்­பாக சமூக இடை­வெ­ளியை பின்­பற்ற வேண்­டும் என அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!