கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு

மதுரை: புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான தளர்வுகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து பின் அறிவிப்பார் என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதியில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதைச் சுட்டிக்காட்டினர்.

அதேபோல் கோவில் நகரமாம் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற புகழ் பெற்ற கோவில்களில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசு ஆய்வு செய்யும் என்றார் ராஜன் செல்லப்பா.

“மீனாட்சியம்மன் கோவிலில் சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இதுகுறித்து அவர் ஆய்வு செய்வார்,” என்று ராஜன் செல்லப்பா மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் கோவில், தேவாலயம், பள்ளிவாசல் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!