சென்னையில் வீட்டுக்கு வீடு ‘கொவிட்-19’ பரிசோதனை

சென்னையில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் எதிர்பாராத அளவுக்கு அதிகரித்துள்ளதால் அந்நகரம் தீவிரக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று புதிதாக 688 பேருக்கு கிருமித் ெதாற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 552 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால் சென்னையில் கிருமிப் பரவல் அதிகமாகக் காணப்படும் நான்கு இடங்களில் வீட்டுக்கு வீடு கிருமித்தொற்று சோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். மொத்தம் பதிவான 688 கிருமித் தொற்றுகளில் 87 பேர் வெளிநாடு களிலிருந்து வந்தவர்கள் என்று அதிகாரிகள் கூறினர்.

துபாயிலிருந்து வந்த 23 பயணி களுக்கும் மாலத்தீவிலிருந்து வந்த ஒருவருக்கும் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. குவைத், மலேசியாவிலிருந்து தமிழகம் வந்த பயணிகளுக்கு கிருமித் தொற்று இல்லை என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் அவர்களில் சிலருக்கு கிருமித் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கிடையே, சென்னையில் கிருமித்தொற்று அதிகமாக உள்ள ராயபுரம், புளியந்தோப்பு, மோதிலால் ஸ்திரீட் ஆகிய இடங்களில் உள்ள கொவிட்-19 சிகிச்சை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் வருகை யளித்தார். அப்போது மூத்த குறை தீர்ப்பு அதிகாரி டாக்டர் ராதா கிருஷ்ணன், சுகாதார செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். “தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கிருமித்தொற்று அதிக மாக இருப்பதால் விரைவில் வீட்டுக்குவீடு சோதனை தொடங்கப்படும்,” என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!