சுடச் சுடச் செய்திகள்

ஆராய்ச்சி குழு: கபசுர குடிநீரால் பலன் உண்டு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் நிலவேம்பு குடிநீரும் கபசுரக் குடிநீரும் அளிக்கப்படுகிறது.

இத்தகவலை சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைமை இயக்குநர் மருத்துவர் க.கனகவல்லி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவாக குணமடைந்து வருவதாகவும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் வசிப்பவர்களுக்கும் இந்த குடிநீர் வழங்கப்படு வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கொரோனா கிருமியை எதிர்க்கும் திறன் கபசுரக் குடிநீருக்கு உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இது ஆராய்ச்சியில் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்றவைகளுக்கு கபசுரக் குடிநீர் சிறந்த மருந்தாகும். இந்த அறிகுறிகள் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உள்ளன.

“கபசுரக் குடி நீரில் உள்ள 15 மூலிகைகளுக்கும் நோய் தடுப்பாற்றல் இருப்பது உறுதியாகி உள்ளது,” என்று கனகவல்லி மேலும் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon