சென்னை நகரெங்கும் வீடுவீடாக பரிசோதனை

சென்னை: சென்னை, திரு­வள்­ளூர், காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு ஆகிய நான்கு மாவட்­டங்­க­ளி­லும் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில், இம்­மா­தம் 30ஆம் தேதி வரை 12 நாட்­க­ளுக்கு ஊர­டங்கு உத்­த­ரவு நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த தரு­ணத்­தைப் பயன்­ப­டுத்தி, வீடு­வீ­டா­கச் சென்று வீட்­டுக்­குள் இருக்­கும் அனைத்து மக்­க­ளுக்­கும் 11,957 பெண் பணியாளர்­க­ளைக் கொண்டு காய்ச்­சல் பரி­சோ­த­னை­க­ளைச் செய்து வரு­வ­தாக சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

இ்ப்பணி ஊர­டங்கு உத்­த­ரவு முடி­யும்­வரை தொட­ரும் என­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சென்னை வேளச்­சே­ரி­யில் உள்ள குரு­நா­னக் கல்­லூ­ரி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை தமி­ழக முதல்­வர் பழ­னி­சாமி நேற்று நேரில் பார்­வை­யிட்­டார்.

அதன்­பி­றகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் கூறு­கை­யில், “தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைத் தடுக்க அரசு தீவிர முயற்­சி­களை எடுத்து வரு­கிறது. சென்­னை­யில் இப்­போது போடப்­பட்­டுள்ள ஊர­டங்கு கிரு­மித்­தொற்­றைத் தடுத்து மக்­கள் உயி­ரைக் காக்­கவே போடப்­பட்­டுள்­ளது,” என்று கூறி­னார்.

இதற்­கி­டையே, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ.பிர­காஷ் பேசிய போது, “சென்­னை­யில் வீடு­வீ­டா­கப் பரி­சோ­த­னைக்கு வரும் களப் பணி­யா­ளர்­க­ளி­டம், தங்­க­ளுக்கு கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­குறி இருப்­ப­தாக பொது­மக்­கள் நினைத்­தால் அதை எந்த ஒரு ஒளி­வு­மறை­வின்றி தெரி­விக்­க­வேண்­டும். அப்­படி செய்­தால் 10 முதல் 15% இறப்­பு­க­ளைத் தவிர்க்­க­மு­டி­யும்.

“சென்­னை­யில் கிரு­மித்­தொற்று இருப்­ப­தாக உறுதி செய்­யப்­பட்ட 299 பேர் போலி­யான முக­வரி, கைபேசி எண்­க­ளைக் கொடுத்­து­விட்டு காணா­மல் போனார்­கள். அவர்­களில் 150 பேர் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு மீண்­டும் சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­னர். மீத­முள்ள 149 பேரைத் தேடும் பணி தொடர்­கிறது.

“சென்னை மாந­க­ராட்­சி­யில் இது­வ­ரை­யில் 2,10,000 பேருக்கு பரி­சோ­தனை செய்­யப்­பட்­டுள்­ளது.

“இந்த ஊர­டங்­கில் 90% மக்­கள் வீட்­டி­லேயே இருப்­ப­தால் காய்ச்­சல் அறி­குறி கண்­ட­றி­யும் குழுக்­கள் வீடு, வீடா­கச் சென்று பரி­சோ­தனை செய்­வார்­கள்.

“இதன்­மூ­லம் அறி­குறி இருப்­ப­வர்­களை எளி­தில் கண்­ட­றிய முடி­யும்,” என்று கூறி­னார்.

சென்னையில் மீண்டும் நடப்புக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு மக்களை சிரமப்படுத்துவதற்காகப் போடப்பட்டது அல்ல; கொவிட்-19 கிருமித்தொற்றில் இருந்து மக்களின் உயிரைக் காக்கவே போடப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!