இரட்டைச் சகோதரர்கள் கொலை வழக்கு: 10 கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனை

கட­லூர்: முன்­வி­ரோ­தம் கார­ண­மாக அண்­ணன்-தம்­பியை வெட்­டிக் கொன்ற வழக்­கில், முக்­கிய குற்­ற­வா­ளிக்கு இரட்டை ஆயுள் தண்­ட­னை­யும் மற்ற 9 பேருக்­கும் தலா ஒரு ஆயுள் தண்­ட­னை­யும் விதித்து கட­லுார் நீதி­மன்­றம் தீர்ப்பு அளித்­துள்­ளது.

உற­வி­ன­ரான ரெட்­டிச்­சா­வ­டி­யைச் சேர்ந்த லட்­சு­ம­ணன் என்­ப­வ­ரு­டன் ஏற்­பட்ட மோத­லில் வினோத்­கு­மார், 21, சதீஷ்­கு­மார், 19, ஆகிய இருவரும் கொல்­லப்­பட்­ட­னர்.

2016ஆம் ஆண்டு, மே 25ஆம் தேதி சகோ­த­ரர்­கள் இரு­வ­ரை­யும் 10 பேர் கொண்ட கும்­பல் ஓட­ஓட விரட்டி கொலை செய்­தது.

இச்சம்­ப­வம் குறித்து ரெட்­டிச் சாவடி போலி­சார் வழக்கு பதிந்­த­னர். கட­லூர் கூடு­தல் மாவட்ட நீதிமன்­றத்­தில் இவ்­வ­ழக்­கின் விசா ரணை முடிந்து நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

வழக்கை விசா­ரித்த நீதி­பதி செந்­தில்­கு­மார், அதிக கோபத்தால் இரு உயிர்களைப் பறித்த கொலை­யாளி லட்­சு­ம­ண­னுக்கு இரட்டை ஆயுள் தண்­ட­னை­யும் ரூ.7,500 அப­ரா­த­மும் விதித்­தார். அவ­ருக்கு துணை­யாக செயல்­பட்ட 9 பேருக்கு தலா ஓர் ஆயுள் தண்­ட­னை­யும் 4,500 ரூபாய் அப­ரா­த­மும் விதித்து உத்­த­ர­விட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!