சென்னையில்  தினமும் 35,000 பேர் தனிமை  சென்னையில் 3,500 களப்பணியாளர்கள்

சென்னை: கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுப் பர­வலை முறி­ய­டிக்­கும் வகை­யில், சென்­னை­யில் தினந் தோறும் சுமார் 35,000 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சென்னை மாந­க­ராட்சி ஆணை­யர் கோ.பிர­காஷ் தெரி­வித்­தார்.

சென்னை தேனாம்­பேட்டை மண்­ட­லம், சுப்­பு­ரா­யன் நக­ரில் அமைக்­கப்­பட்­டுள்ள காய்ச்­சல் முகாம், கொவிட்-19 தடுப்­புப் பணி கள் குறித்து விவ­ரம் கேட்­ட­றிந்த ஆணை­யர், அதன்­பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

“சென்­னை­யில் தின­மும் 35,000 பேர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு வரு கின்­ற­னர். காய்ச்­சல் முகாம்­களில் ஒவ்­வொரு நாளும் 40,000 பேர் உடல்­ந­லனை சோதித்து வரு கின்­ற­னர்.

“பொது­மக்­கள் முகக்­க­வ­சம் அணிந்து, தனி நபர் இடை­வெ­ளியை மற­வா­மல் பின்­பற்­றி­னால்­தான் இந்த கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்­டு­வர முடி­யும்.

“சென்­னை­யில் நடப்­பில் உள்ள இப்­போ­தைய ஊர­டங்­கில் கூடு­த­லாக 1.5 லட்­சம் பேருக்கு பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதில் 25% மக்­க­ளுக்கு கொவிட்-19 தொற்று இருப்­பது உறு­தி­யாகி உள்­ளது.

“மழைக்­கா­லம் ஆரம்­பித்து விட்­டால் அது மாந­க­ராட்­சிக்கு கூடு­தல் சவா­லான கால­மாக அமைந்து­வி­டும். ஊழி­யர்­கள் பணிக்கு வரு­வ­தில் தாம­தம் ஏற்­படும். டெங்கி உள்­ளிட்ட காய்ச்சலும் அதி­க­ரிக்­கும் என்­ப­தால் இவற்றை எதிர்­கொள்­ள­வும் சென்ைன மாந­க­ராட்சி தயா­ராகி வரு­கிறது,” என்று கோ.பிர­காஷ் கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படுபவர்­க­ளின் எண்­ணிக்கை நாளும் அதி­க­ரித்து வரு­கிறது. அதேவேளை­யில் குண­ம­டை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளது.

ஆனால், சென்­னை­யில் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு குண மடை­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் உயி­ரி­ழப்­பும் இணைந்தே அதி­க­ரித்து வரு­வ­தால் பொது­மக்­கள் மத்­தி­யில் கலக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­வித் துள்­ளன.

தமி­ழக சுகா­தா­ரத்­துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “கடந்த சில நாட்­க­ளாக தமி­ழ­கத்­தில் தின­சரி கொரோனா தொற்று எண்­ணிக்கை 3,000ஐ தாண்டி பதி­வாகி வந்த நிலை­யில் நேற்று 4,000ஐ தாண்டி பதி­வா­னது.

“தமி­ழ­கத்­தில் இது­வரை இத் தொற்­றால் 98,392 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். குண­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 56,021 ஆக உயர்ந்­துள்­ளது.

“சென்­னை­யில் 62,598 பேர் இத் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 38,000 பேர் குண­ம­டைந்து உள்­ள­து­டன் 22,000க்கும் மேலானோர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 200 மண்டலங்களிலும் வசிக்கும் சுமார் 85 லட்சம் மக்களைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 3,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தினமும் 5 முதல் 10 தெருக்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துவர். மருந்துகள் வழங்குவது, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொடுப்பது உள்ளிட்ட பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சேவை பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படம்: ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!