காசிமேடு மீன் சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம்; சமூக இடைவெளி காற்றில் பறந்தது இன்று தளர்வில்லா ஊரடங்கு

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் எந்த ஒரு தளர்­வும் இல்­லாத முழு ஊர­டங்கு இன்று அமல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

வாரஇறு­தி­யான ஞாயிற்­றுக்கிழ­மை­களில் சந்­தைக்கு ஏரா­ள­மான மக்­கள் திரள்­வர். இது­போல் கூட்­டம் கூடு­வ­தைத் தடுக்­கவே ஞாயிற்­றுக்­கி­ழ­மை­கள் தோறும் ஊரடங்கு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வருகிறது.

இந்த உத்­த­ர­வால் மின்­னல் வேகத்­தில் பரவி வந்த கொரோனா தொற்­றின் வேகம் இப்­போது சற்றே தணி­யத் தொடங்கி உள்ளதாக­வும் தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

“கடந்த மாதம் போலவே இந்த ஆகஸ்ட் மாதத்­தி­லும் நோய்ப் பர­வ­லைத் தடுக்­கும் வகை­யில் அனைத்து ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் தளர்­வில்­லாத ஊர­டங்கு அமல் படுத்­தப்­படும்,” என தமி­ழக முதல்­வர் அறி­வித்­துள்­ளார்.

அதன்­படி, இன்று மாநி­லம் எங்­கும் மருத்­து­வ­ம­னை­கள், மருந்­துக் கடை­கள் மட்­டுமே செயல்­படும். காய்­கறி, மளி­கைக்கடை உள்­ளிட்ட அனைத்­துக் கடை­களும் மூடப்­பட்­டி­ருக்­கும். வாக­னங்­கள் எது­வும் இயங்­காது. மக்­கள் வீடு­களை விட்டு வெளி­யில் செல்­லா­மல் முழு ஊர­டங்­கிற்கு முழு ஒத்­து­ழைப்பு அளிக்­க­வேண்­டும் என அரசு ேகட்டுக் கொண்டுள்ளது.

இன்று முழு ஊர­டங்கு என்­ப­தால், சென்னை காசி­மேடு மீன் சந்தையில் நேற்று கூட்­டம் அலை­மோ­தி­யது.

“மீன் வாங்­கி­விட்டு உடனே திரும்­பிச் செல்ல வேண்­டும், வியா­பா­ரி­க­ளுக்கு மட்­டுமே இங்கு அனு­மதி. பொது­மக்­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை,” என அறி­வு­றுத்தப்பட்டது.

காவல்­து­றை­யி­ன­ரும் பாது­காப்புப் பணி­களில் ஈடு­ப­டுத்­தப்பட்டு கூட்­டம் சேரா­மல் தடுக்க முற்­பட்­ட­னர். பொது­மக்­கள் பெரும்­பா­லும் முகக்கவ­சம் அணிந்­தி­ருந்­தா­லும் அதை வாயை, மூக்கை முழு­மை­யாக மூடும் அள­வுக்கு பயன்­படுத்­த­வில்லை என்­ப­தை­யும் காண­மு­டிந்­தது. சமூக இடை­வெளியும் காற்­றில் பறக்­க­வி­டப்­பட்­டி­ருந்­தது.

இதேபோல், இதர இடங்களில் உள்ள மளிகை, காய்கறி கடை களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிவதைக் காணமுடிந்தது.

இன்று தமி­ழ­கம் முழுவதும் முழு ஊர­டங்கு என்­ப­தால், சென்னை காசி­மேடு மீன் சந்தையில் நேற்று மக்கள் கூட்­டம் அலை­மோ­தி­யது.

பொது­மக்­கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். ஆனால், சமூக இடை­வெளி காற்­றில் பறக்­க ­வி­டப்­பட்­டி­ருந்­தது.

 

படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!