ரூ.280 கோடி பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தடுப்பணைகள், கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பொதுப்பணி துறை சார்பில் ரூ.280.90 கோடி மதிப்பில் செய்யப்பட உள்ள 22 திட்டப் பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நேரடி காணொளி வழியாக அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: தமிழக ஊடகம்