புதுவையிலும் ஆகஸ்டு 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி: தமிழகம் போலவே புதுவையிலும் ஆகஸ்டு 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படு வதாக அறிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, ஆனால், ஞாயிற் றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக் குப் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய நாராயணசாமி கூறுகையில், “மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர் வைப் பின்பற்றி புதுைவயிலும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது.

“புதுச்சேரியில் அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி உள்ளது. மத்திய அரசின் அடுத்தகட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும்வரை புதுச்சேரியில் உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

“புதுச்சேரிக்குள் வருபவர் களுக்கும் வெளியே செல்பவர் களுக்கும் ‘இ-பாஸ்’ அனுமதி கட்டாயம்,’’ என கூறியுள்ளார்.