மாநகராட்சி: சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மூன்று இலக்கத்திற்கு குறையும்

சென்னை: சென்னை நக­ரில் கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை விரை­வில் 4 இலக்­கத்­தில் இருந்து 3 இலக்கமாகக் குறை­யும் என­ சென்னை மாந­க­ராட்சி அதி­கா­ரி­கள் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வில் மகா­ராஷ்­டிரா வுக்கு அடுத்­த­ப­டி­யாக கொரோனா கிருமி பாதிப்­பில் தமி­ழ­கம் இரண் டாம் இடத்­தில் உள்­ளது. இதில் சென்னை மக்­கள்­தான் அதிக அள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், சென்­னை­யில் தற்­போது பாதிப்­ப­டை­வோர் எண் ணிக்கை தொடர்ந்து 1,400க்கும் குறை­வா­கவே உள்­ளது.

மாநிலத்தில் வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்டிருந்த 5,881 பேரில் 1,013 பேர் சென்னை யைச் சேர்ந்தவர்கள்.

இவர்களையும் சேர்த்து சென்னையில் பாதிக்கப்பட்ட வர்களின் மொத்த எண்ணிக்கை 99,794 ஆக உயர்ந்துள்ளது.இத்தொற்று சென்னையில் ஒரு லட்சத்தை தொட உள்ளது.

சென்னையில் 1,013 ஆக உள்ள இந்த பாதிக்கப்பட்டோர் எண்­ணிக்கை அடுத்­த­டுத்த நாட்­களில் மேலும் குறைய வாய்ப்­புள்­ள­தா­கவும் தகவல்கள் கூறியுள்ளன.

தமி­ழக அர­சின் சுகா­தா­ரத்­துறை மாநி­லத்­தில் தின­சரி கொரோனா கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை, உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை, குணமடைந்­தோர் எண்­ணிக்கை உள்­ளிட்ட விவ­ரங்­களை வெளியிட்டு வரு­கிறது.

அதன்­படி, “வெள்­ளிக்­கி­ழமை ஒரே நாளில் தமி­ழ­கத்­தில் 5,881 பேருக்­குப் பாதிப்பு ஏற்­பட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து 245,859 பேர் பாதிப்பு அடைந்­துள்­ள­னர்.

“இது­வரை 1,83,956 பேர் குண­மாகி உள்­ள­னர். 3,935 பேர் உயிர் இழந்­துள்­ள­னர். தற்­போது 57,968 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்.

“சென்­னை­யில் 99,974 பேருக்­குப் பாதிப்பு ஏற்­பட்டு, அதில் 2,110 பேர் உயிர் இழந்­துள்ளனர். இது­வரை 84,916 பேர் குணம் அடைந்து தற்­போது 12,768 பேர் சிகிச்­சை­பெற்று வருகின்றனர்.

“சென்­னை­யில் இம்மாதத் தொடக்­கத்­தில் தின­மும் இப் பாதிப்பு எண்­ணிக்கை 2,400 வரை இருந்­தது. அதன்­பி­றகு குண­மடைந்­தோர் எண்­ணிக்கை 60% லிருந்து 85% ஆக உயர்ந்­தது. பாதிப்­ப­டைந்­தோர் விகி­த­மும் 12.7% ஆக குறைந்­தது.

“சென்­னை­யில் உள்ள தேனாம்­பேட்டை, மணலி, தண்­டை­யார்­பேட்டை, ராய­பு­ரம் மண்­ட­லங்­களில் பாதிப்பு 10% குறைந்­துள்­ளது. இதேபோல் ஆறு மண்­ட­லங்­களில் குண­ம­டை­வோர் 85% ஆக அதி­க­ரித்­துள்­ள­னர். முன்பு சோதனை, பாதிப்பு விகி­தம் 9% ஆக இருந்த நிலை­யில் ஆகஸ்ட் மாதத்­தில் இருந்து 5% ஆக குறைய வாய்ப்­புள்­ளது,” எனக் கூறப்­ப­ட்டுள்ளது.

தமிழக மாநி­லத்­தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒருபுறம் அதி­க­ரித்து வந்­தா­லும் மறு­பு­றம் கணி­ச­மான அள­வில் இத்தொற்­றில் இருந்து மக்கள் குண­ம­டைந்து வரு­வது நிம்மதியைத் தந்துள்ளது.