தமிழக ஆளுநருக்கு கொவிட்-19; வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்து

தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆளிநர் மாளிகையில் பணிபுரியும் 85க்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்று இருப்பதாக கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.

ஆளுநரின் நேரடி உதவியாளருக்கும் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா பரிசோதனைக்குச் சென்ற ஆளுநர் புரோகித்துக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் அதிகம் இல்லாததால் அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த 7 நாட்களாக அவர் வீட்டில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 99 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தனர்; அங்கு கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 251,738 ஆக அதிகரித்துள்ளது.