சுடச் சுடச் செய்திகள்

கிருமித்தொற்றால் உயிரிழந்த தாயின் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்

தேனி: கொரோனா பாதிப்­பு­டன் உயி­ரி­ழந்த மூதாட்­டி­யின் உடலை இடு­காட்­டில் அடக்­கம் செய்­வ­தற்கு உத­வி­கள் எது­வும் கிடைக்­கா­த­தால், மகனே தனது தாயின் உடலை வாடகைத் தள்­ளு­வண்­டி­யில் தள்­ளிச் சென்­றுள்ள அவ­லம் நடந்­துள்­ளது.

கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் உடலை, எந்த ஒரு பாது­காப்பு விதி­மு­றை­க­ளை­யும் பின்­பற்­றா­மல், மக்கள் வசிக்கும் முக்கிய வீதி­கள் வழி­யாக தள்­ளு­வண்­டி­யில் தள்ளிச்சென்­ற­தால் கூட­லூர் பகுதி மக்­கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தேனி மாவட்­டம், கூட­லூ­ரைச் சேர்ந்த சின்­னம்­மாள் என்ற 80 வயது மூதாட்டி, வயிற்­றுப்­போக்­கின் கார­ண­மாக கூட­லூர் ஆரம்ப சுகா தார நிலை­யத்­தில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

அங்கு நடத்­தப்­பட்ட பரி­சோத னையில், அவ­ருக்கு கொரோனா தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து, வீட்­டி­லேயே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டவர், உடல்­ந­லம் குன்­றி நேற்றுமுன்தினம் உயி­ரி­ழந்­தார்.

இது­கு­றித்த தக­வல் அறிந்த கூட­லூர் நகராட்­சி­ சுகா­தா­ரத் துறை யினர், உடலை மயா­னத்­திற்கு எடுத்துச் செல்வதற்கு ஆம்­பு­லன்ஸ் வாக­னத்­திற்கு தக­வல் தெரி­விப்­ப­தாகக் கூறியுள்­ள­னர்.

ஆனால், 12 மணி நேர­மா­கி­யும் ஆம்­பு­லன்ஸ் வரா­த­தால் அதி­ருப்தி யடைந்த அப்­ப­குதி மக்­கள், உடலை உடனே மயா­னத்­திற்கு கொண்டு செல்­லு­மாறு சின்­னம்­மா­ளின் மக னுக்கு அழுத்தம் கொடுத்தனர்.

 

இடுகாட்டிற்கு தாயின் உடலை

எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் வராததால்,

வாடகைத் தள்ளுவண்டி யில் தள்ளிச் செல்லும் மகன்.

படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon