கிருமி பாதித்த லட்சம் பேருக்கு யோகா சிகிச்சை

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட மக்­க­ளுக்கு அரசு மருத்­து­வ­ம­னை­களில் யோகா பயிற்­சி­களும் இயற்கை மருத்­துவ சிகிச்­சை­களும் அளிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவற்­றின் மூலம் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வர்­கள் விரைந்து குண­ம­டைந்து வரு­வ­தா­க­வும் இந்த சிகிச்சை முறைகளால் பெரும்பாலான மக்­கள் பய­ன­டைந்­தி­ருப்பதாக­வும் மருத்­து­வா்­கள் கூறியுள்­ளனா்.

தமி­ழ­கத்­தில் இது­வரை 308,649 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்­நிை­ல­யில், இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வா்­களில் சிலருக்கு அலோ­பதி சிகிச்­சை­யு­டன் சோ்த்து சித்தா, யோகா சிகிச்­சை­களும் அளிக்­கப்பட்டு வரு­கின்­றன.

தமி­ழ­கத்­தில் மருத்­து­வக் கல்­லூரி மருத்­துவமனை­கள், மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னை­கள் உள்­பட 86 இடங்­களில் நோயா­ளி­களுக்கு யோகா­வு­டன் இயற்கை மருத்­துவ சிகிச்­சை­ அளிக்­கப்பட்டு வருகிறது.

இது­கு­றித்து அரசு யோகா இயற்கை மருத்­து­வத் துறை அதி­கா­ரி­கள் கூறு­கை­யில், “கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்ட வா்களில் பெரும்­பா­லா­னோ­ருக்கு நுரை­யீ­ரல் தொற்று ஏற்­பட வாய்ப்­புள்­ளது. அவா்கள் தொடா்ந்து பிர­ணா­யா­மம் பயிற்­சி­கள் செய்து வந்தால் நுரை­யீ­ர­லின் செயல்திறன் அதி­க­ரிக்­கும். சுவா­சப் பாதை­களும் சீரா­கும். உட­லில் நோய் எதிா்ப்­புச் சக்­தியையும் அதிகரிக்க உதவும்.

“இதைத்தவிர, மூலிகை பானங்­கள், நவ­தா­னிய வகை­கள், சிறு தானி­யங்­கள் உள்­ளிட்ட ஆரோக்­கிய உண­வு­களும் நோயா­ளி­களுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன. அத் துடன் நீராவி பிடித்­தல், சுவா­சத்­துக்­கான அரோமா தெரபி போன்­ற­ வை­யும் அளிக்­கப்­ப­டு­கின்றன.

“இதன் கார­ண­மாக தொற்றால் பாதிக்­கப்­பட்­ட­வா்­கள் விரைந்து குண­ம­டை­வ­தைக் காணமுடி­கிறது,” என்று தெரி­வித்­தனா்.

கொரோனா நோயாளிகளுக்கு ேயாகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

சென்னை, கிண்­டி­யில் உள்ள அரசு கொரோனா மருத்­து­வ­ம­னை­யில் நோயா­ளி­க­ளுக்கு நீராவி, நறு­மண எண்­ணெய் சிகிச்சை களும் அளிக்­கப்­ப­டு­கின்றன. இதனால் நோயா­ளி­களின் ஆரோக்­கி­யம் மேம் ­ப­டு­வ­தோடு, அவர்­க­ளுக்கு புத்­து­ணர்­வு அளிப்பதாகவும் கூறப்படுகிறது.

படம்: ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon