11ஆம் நூற்றாண்டின் மகாவீரர் சிலை கண்டுபிடிப்பு

கந்தர்வகோட்டை: தமிழகத்தில் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுகோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை அருகே மங்களாகோவில் கிராமத்தில் அக்னி ஆற்றுக்கு வட புறமுள்ள விவசாய நிலத்தில் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து பேசிய தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை முனைவர் பட்ட ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன், தற்போது கண்டெடுக்கப்பட்ட மகாவீரர் சிற்பம் ஒன்றரை அடி அகலம், மூன்றரை அடி உயரத்துடன் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக தியான கோலத்துடன் நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் காணப்படு கிறது. விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சேதமடைந்துள்ளது,” என்றார்.

“இதன் உருவமைப்பை ஒப்பிட்டால் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம்.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பெரியகுளத்தில் அக்னி ஆறு தொடங்கி கந்தர்வகோட்டை ஆற்றங்கரைவிடுதி, கறம்பக்குடி, திருமணஞ்சேரி வரையிலும் அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்டம் இடையாத்தி கொள்ளுக்காடு, கீழத்தோட்டம் வழியாக 78 கிலோ மீட்டர் வரை பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

“அக்னி ஆறானது மிகப்பழைமையானது. இது ‘அஞ்ஞான விமோச்சனி’ என்று அழைக்கப்பட்டு வந்திருப்பதும் ஆற்றின் பெயரும் சமணக் கொள்கையோடு தொடர்புடன் இருப்பதையும் சமண சமயம் செழித்திருந்த ஆற்றுப்படுகையாக இருந்திருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இக்கருத்தை உறுதிசெய்யும் வகையில் கந்தர்வ கோட்டை கீழ வாண்டான் விடுதி சிவனார் திடல் என்ற சமணர் திடலில் செங்கல் கட்டுமானத்தால் உருவாக்கப்பட்ட சமணப்பள்ளியும் கையடக்க சமணர் சிற்பமும் நான்கரை அடி உயரமுடைய சமணர் சிற்பமும் அடையாளப்படுத்தினோம்.

“தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மங்களாகோவில் சமணர் சிற்பமும் அந்த இடத்துக்கு மிக அருகில் உள்ளது. அதுமட்டுமின்றி அக்னி ஆற்றுப்படுகையில் அமைந்து உள்ள வாழமங்கலம், மங்கத்தேவன்பட்டி, மோசகுடி, கோவில் வீரக்குடி, செம்பாட்டூர், புத்தாம்பூர் உள்ளிட்ட ஊர்களில் சமணத் தீர்த்தங்கரர் சிற்பங்கள் சமணப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டிருப்பதும் வலுச் சேர்க்கும் சான்றுகளாக உள்ளன என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!