சிதம்பரம் கேள்வி: இன்னொரு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடத்துவாரா மோடி

தனது அன்பு நண்­பரை கௌர­விக்க இன்­னொரு ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடத்­து­வாரா மோடி? என்று ப.சிதம்­ப­ரம் கேள்வி எழுப்பி உள்­ளார்.

இது­கு­றித்து தனது டுவிட்­ட­ரில், “திரு டோனால்டு டிரம்ப் இந்­தி­யாவை சீனா மற்­றும் ரஷ்­யா­வு­டன் இணைத்து, மூன்று நாடு­களும் கொரோனா இறப்­பு­க­ளின் எண்­ணிக்­கையை மறைத்து வைத்­தி­ருப்­ப­தாக குற்­றம் சாட்­டி­னார். மூன்று நாடு­களும் அதிக காற்று மாசு­பாட்டை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன என்­றும் அவர் குற்­றம் சாட்­டி­னார்.

திரு.மோடி தனது அன்பு நண்­பரை கௌர­விப்­ப­தற்­காக மற்­றொரு ‘நமஸ்தே டிரம்ப்!’ பேர­ணியை நடத்­து­வாரா?” என்று பதி­விட்­டுள்­ளார்.

முன்­ன­தாக அமெ­ரிக்க அதி­பர் தேர்­த­லில் போட்­டி­யி­டும் டோனால்ட் டிரம்ப் மற்­றும் ஜோ பைடன் இடையே முதல் நேருக்கு நேர் விவா­தம் நேற்று முன்தினம் நடை­பெற்­றது. இதில் இந்­தியா குறித்த உரை­யா­டல்­கள் முக்­கிய பங்கு வகித்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!