தாயைக் கவனிக்காத மகன்; சொத்தைப் பறித்து தாயிடமே ஒப்படைத்த அதிகாரி

கோவை: தன்னை வளர்த்து ஆளாக்­கிய தாயின் சொத்துகளைப் ெபற்­றுக்­கொண்டு, அவரைப் பரா­மரிக்­காமல் நடுத்தெருவில் நிறுத்திய மக­னுக்கு கோவை வரு­வாய்த் துறை கோட்­டாட்­சி­யர் உரிய பாடம் புகட்டியுள்ளார்.

மகனிடம் இருந்த தாயின் ெசாத்துகளைப் பறித்து தாயிடமே ஒப்படைத்துள்ள கோட்டாட்சியரின் நட­வ­டிக்கையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கோவை, துடி­ய­லூர் அருகே உள்ள அம்­பேத்­கர் வீதி­யில் வசித்து வரு­ப­வர் லட்­சுமி, 75. இவ­ரது கண­வர் உயி­ரி­ழந்து விட, பிள்­ளை­களை நம்பி காலத்தைத் தள்ளும் சூழ்­நிலைக்கு லட்­சுமி தள்­ளப்­பட்­டார். ஆனால், பெற்ற பிள்­ளை­கள் லட்­சு­மிக்கு ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

வயது மூப்பின் கார­ண­மாக பல பிரச்சினைகளுக்கும் ஆளாகி வந்த லட்சுமி, வேறு வழி­யின்றி தனது நிலை குறித்து வரு­வாய் தீர்­ப்பா­யத்­திற்­குப் புகார் மனு அனுப்­பி­னார். மனு­வில், தனது மக­னுக்­குத் தான் எழுதி வைத்த சொத்­துகளை முதி­யோர் பாது­காப்புச் சட்­டத்­தின்கீழ் மீட்­டுத்­ த­ரும்படி கோரினார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பா­க கோவை மாவட்ட ஆட்­சி­யர் ராசா­மணிக்கும் அவர் மனு அனுப்பினார்.இந்நிலையில், லட்­சு­மி­யின் பிள்­ளை­களான சசி­கு­மார், 42, பரி­மளா, 55, சிவ­காமி, 45, ஆகி­யோ­ரி­டம் மாவட்ட ஆட்­சி­யர் விசா­ரணை நடத்தினார்.

விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில், லட்­சுமி தனது மகன் சசி­கு­மா­ருக்கு எழு­திக்கொடுத்த 4 சென்ட் 314 சது­ரடி நிலத்­திற்­கான ‘செட்­டில்­மெண்ட்’ பத்­தி­ரம் ரத்து செய்­யப்­பட்­டு, நிலம் லட்சுமியிடமே வரு­வாய்த்துறை கோட்­டாட்­சி­யரால் ஒப்படைக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!