தனி ஒருவராக சாலையைச் சீரமைக்கும் முதியவர்

பாகூர்: புதுச்­சே­ரி­யில் உள்ள பாகூர் நக­ரின் பல்­வேறு இடங்­க­ளி­லும் காணப்­படும் சாலை­கள் மேடு பள்­ள­மா­க­வும் குண்­டும் குழியுமாக­வும் மிக மோச­மாக உள்­ளன.

இத­னால், வாக­னங்­களில் செல்­வோர் பெரும் அவ­திப்­பட்டு வரு­கின்­ற­னர். சில சம­யங்­களில் வாக­னங்­கள் பழு­தாகி நின்றுவிடு­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­தப் புகார்­கள் குறித்து அரசு அதி­கா­ரி­க­ளி­டம் பல­முறை பாதிக்­கப்பட்­ட­வர்­களும் பொது மக்­களும் புகார் அளித்­தும் இது வரை எந்த ஒரு நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இந்­நி­லை­யில், தனி ஒரு­வ­ராக முதி­ய­வர் ஒரு­வர் பாதிக்­கப்­பட்ட சாலை­களை சீரமைத்து வரு­கி­றார்.

குறிப்­பாக பாகூர்- கன்­னி­யக் கோவில் சாலை, பரிக்­கல்­பட்டு - குரு­வி­நத்­தம் சாலை, பாகூர் - மாஞ் ­சாலை சாலைக் கற்­கள் பெயர்ந்து வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளை­வித்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், காவ­லா­ளி­யாக பணி­யாற்றி வரும் குரு­வி­நத்­தம் பாரதி நக­ரைச் சேர்ந்த புரு­ஷோத்த மன், 83, என்ற முதி­ய­வர், சாலை­யில் நடக்­கும் விபத்­து­க­ளைப் பார்த்து மனம் வருந்தி, விபத்து ஏற்­ப­டா­மல் தடுக்க முடி­வெ­டுத்­தார்.

இதை­ய­டுத்து, பாகூர் மாஞ்­சா­லை­யில் உள்ள பள்­ளங்­களை சாலை­யோ­ரம் உள்ள மண், கற்­கள் மூலம் நிரப்பி சரி­செய்து வரு­கி­றார்.

இது­கு­றித்து புரு­ஷோத்­த­மன் கூறி­ய­போது, “பாகூர் - மாஞ்­சாலை சாலை குண்­டும் குழி­யு­மாக இருப்­ப­தால் விபத்­து­கள் நடக்­கின்றன. இதை சரி­செய்ய என்­னா­லான முயற்­சி­யைச் செய்து வரு­கி­றேன். கடந்த மூன்று நாட்­க­ளாக தனி ஆளாக சாலை­யோ­ரம் உள்ள மண், கற்­க­ளைக் கொட்டி பள்­ளங்­களை மூடி வரு­கி­றேன். அரசு செய்­யும் என்று எதிர்­பார்த்­தால் அது இப்­போ­தைக்கு நடக்­காது. அத­னால் நானே முடிந்­ததை செய்­து­வ­ரு­கி­றேன்,” என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!