முதல்வர் பதவியை ஏற்பதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதி

அர­சி­யல் கட்­சியை அறி­விக்­கப் போகி­றேன் என்று நடி­கர் ரஜி­னி­காந்த் அறி­வித்­தது முதல் தமி­ழக அர­சி­யல் களம் பர­ப­ர­பாக இயங்­கிக் கொண்டு உள்­ளது.

குறிப்­பாக இரு நடி­கர்­க­ளைச் சுற்றி அர­சி­யல் காய்­கள் நகர்த்­தப்­ப­டு­கின்­றன.

ரஜினி தொடங்­கப் போகும் கட்சி ஒரு­வேளை தேர்­த­லில் வெற்றி பெற்­றால் முதல்­வர் பத­வி­யில் ரஜினி அம­ர­மாட்­டார் என்­கிற கருத்து மீண்­டும் மீண்­டும் ஒலிக்­கப்­பட்டு வரு­கிறது.

ரஜினி ஏற்­கெ­னவே எடுத்த முடிவு இது. அதனை அவ­ரால் மேற்­பார்­வை­யா­ள­ராக பெயர் குறிப்­பி­டப்­பட்டு உள்ள தமி­ழ­ருவி மணி­யன் அழுத்­தம் திருத்­த­மா­கக் கூறி இருக்­கி­றார்.

இந்து நாளி­த­ழுக்கு அவர் சிறப்பு பேட்டி அளித்­தார். ‘ஏதோ ஓர் அழுத்­தம் கார­ண­மாக ரஜினி அர­சி­ய­லுக்கு வரு­கி­றார்; ரஜி­னி­யால் பிர­சா­ரம் செய்ய முடி­யாது; தேர்­த­லுக்கு மிகக் குறு­கிய காலம் இருப்­ப­தால் அவர் வெற்­றியை ஈட்ட முடி­யாது’- போன்ற கருத்­து­க­ளுக்கு விளக்­கம் சொல்­வது போல அவ­ரது பேட்டி அமைந்­தி­ருந்­தது.

“முதல்­வர் நாற்­கா­லி­யில் அமர மாட்­டேன் என்று ரஜினி அப்­போது சொன்­ன­து­தான் இப்­போ­தும். அந்­தக் கருத்­தில் அவர் உறு­தி­யாக உள்­ளார். ஆனால் மக்­கள் மன­நிலை வேறு. ரஜினி முதல்­வர் ஆக வேண்­டும் என ஏரா­ள­மா­னோர் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

“சொன்­னதை செய்து காட்­டு­ப­வர் ரஜி­னி­காந்த். 2021 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அனைத்து தொகு­தி­யி­லும் போட்­டி­யி­டு­வேன் என்று 2017ஆம் ஆண்டு சொன்­ன­தைத்­தான் அவர் இப்­போது உறு­தி­

ப­டுத்தி இருக்­கி­றார். வார்த்தை தவ­றாத மனி­தர் அவர். மற்­ற­படி ரஜி­னி­காந்த் கட்சி தொடங்­கி­ய­தற்கு எந்த அழுத்­த­மும் இல்லை. அவ்­வாறு கூறு­வது நகைப்­புக்­கு­ரி­யது.

“ரஜி­னிக்கு மக்­க­ளி­டையே செல்­வாக்கு அதி­கம் இருப்­ப­தால் மற்ற தலை­வர்­க­ளைப்­போல் அதி­கம் பிர­சா­ரம் செய்ய அவ­சி­ய­மில்லை. அவ­ரின் உடல்­நி­லை­யைக் கருதி கிரா­மங்­களில் எல்­இடி திரை மூல­மாக பிர­சா­ரம் செய்­வார்.

“ரஜி­னி­யால் மட்­டுமே வெளிப்­

ப­டை­யான, ஊழல் இல்­லாத நிர்­வா­கத்தை உரு­வாக்க முடி­யும்,” என்று தமி­ழ­ருவி மணி­யன் கூறி­ய­தாக இந்து இணை­யச் செய்தி குறிப்­பிட்­டது.

இந்­நி­லை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த தமி­ழ­ருவி மணி­யன், “ரஜி­னி­யி­ட­மி­ருந்து என்னை பிரிக்க சதி நடக்­கிறது. ரஜினி முதல்­வர் வேட்­பா­ளரா இல்­லையா என்­பது குறித்து நான் எந்த ஊட­கத்­தி­ட­மும் பேச­வில்லை,” என்­றார்.

கடந்த சில ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் தமிழருவி மணியன். தற்போது அதில் வெற்றி யும் அடைந்துள்ளார். ரஜினி ஆரம் பிக்கும் புதிய கட்சியின் மேற்பார் வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளதோடு புதிய பொறுப்புகளும் அவருக்கு காத்திருக்கின்றன.

ரஜினியின் அறிவிப்பைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தமிழருவி மணியனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் கடந்த காலங்களில் பாஜக கூட் டணிக்கு வழி வகுத்தார் என்றும் விஜயகாந்தை முதல்வராக்குவேன் என சபதம் ஏற்றவர் என்றும் வைகோவை முதல்வராக்குவேன் என்றும் கூறியவர் என சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன.

ரஜினி முதல்­வர் பதவி ஏற்க மாட்­டார் என்ற கருத்­தால் ரஜினி ரசி­கர்­கள் சோர்ந்து போய் இருப்­ப­தாக மற்­றொரு செய்தி தெரி­விக்­கிறது.

மக்­கள் நீதி மய்­யம் என்ற கட்­சி­யைத் தொடங்­கிய நடி­கர் கமல்­ஹா­சன் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் எல்­லாத் தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டப் போவ­தாக அறி­வித்­துள்­ளார்.

அந்­தத் தேர்­த­லில் கமல்­ஹா­சன் தான் முதல்­வர் வேட்­பா­ளர் என்று அவ­ரது கட்சி ஏற்­கெ­னவே கூடி அறி­வித்­து­விட்­டது.

கமல்­ஹா­சன் முதல்­வர் வேட்­பா­ள­ராக வலம் வரும்­போது ரஜினி அப்­படி இல்லை என்­றால் தேர்­தல் வேலை­களில் விறு­வி­றுப்பு இருக்­காது என்று ரஜினி ரசி­கர்­கள் கூறு­கின்­ற­னர்.

கமலுக்காக ரஜினி விட்டுக் கொடுத்துள்ளாரா என்று சமூக ஊடகங்களில் கேள்விகள் பறக் கின்றன. ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று வேண்டுதல், பிரார்த்தனை எல்லாம் செய்தோம். ஆனால் அவர் முதல்வர் ஆகாவிட்டால் எங்கள் விருப்பம் நிறைவேறாது,” என்றும் ரஜினி ரசிகர்கள் கூறி வரு கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!