'இதுகூட தெரியாமல்தான் துணை முதல்வராக இருந்தீர்களா' என ஸ்டாலினிடம் பெண் கேள்வி

திமுக தலை­வர் ஸ்டா­லின் பங்­கேற்ற கிரா­ம­ச­பைக் கூட்­டம் நேற்று கோவை தொண்டா முத்­தூ­ரில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டா­லின் “வரும் நான்கு மாதங்­களில் அதி­முக ஆட்­சிக்கு ஒரு முடிவு கட்­டப்­படும். தமிழகத்­தில் கோவை­யில்­தான் ஊழல் அதி­க­மாக உள்­ளது. அதற்­குக் காரணம் உள்­ளாட்­சித் துறை அமைச்­சர் எஸ்.பி. வேலு­ம­ணி­தான்,” என்­றார்.

இதை­ய­டுத்து, கூட்­டத்­தில் இருந்த மக்­க­ளி­டம் ஸ்டா­லின் குறைகளைக் கேட்­ட­றிந்­தார்.

அப்­போது, கூட்­டத்­தில் இருந்து எழுந்த பெண் ஒரு­வர் “இந்த கூட்­டத்தை ஏன் நடத்­து­கி­றீர்­கள்,” என ஸ்டா­லி­னி­டம் கேட்­டார்.

அப்­போது, நீங்­கள் எந்த ஊர் என ஸ்டாலின் கேட்­ட­தைத் தொடர்ந்து மைல்­கல் என்று பெண் கூறி­னார். அது எந்தத் தொகு­தி­யில் வரு­கிறது என ஸ்டா­லின் கேட்­ட­தும், கோபமடைந்த பெண் இது கூட தெரி­யா­மல்தான் நீங்­கள் துணை முதல்­வ­ராக இருந்­தீர்­களா? என திருப்பிக் கேட்­டார்.

இதை­ய­டுத்து, அவர் கோவை சுகு­ணா­பு­ரம் அதி­முக மக­ளிர் அணி­யைச் சேர்ந்த பூங்­கொடி, 40, எனத் தெரியவந்­ததால் அவரை அங்கிருந்து வெளி­யேற்றினர். இந்தச் சம்ப­வத்­தைக் கண்­டித்து தொண்­டா­முத்­தூ­ரில் அதி­மு­க­வினர் சாலை மறி­யலில் ஈடுபட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!