விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பேரணி

புதிய வேளாண் சட்­டங்­களை கண்­டித்து டெல்­லி­யில் போராடி வரும் விவ­சா­யி­கள் குடி­ய­ரசு தின­மான இன்று பிர­மாண்ட டிராக்­டர் பேரணி நடத்தி வரு­கின்­ற­னர். இதற்கு ஆத­ரவு தெரி­வித்து தமி­ழ­கம் முழு­வ­தும் தடையை மீறி விவ­சா­யி­கள் டிராக்­டர் பேரணி நடத்­தி­னர். அவர்­கள் மீது போலி­சார் லேசான தடி­யடி நடத்­தி­னர்.

திருச்சி மாவட்­டத்­தில் வேளாண் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக விவ­சாய சங்க நிர்­வா­கி­கள், மற்­றும் அர­சி­யல் கட்­சி­யி­னர் சார்­பில் இரு­சக்­கர வாகனப் பேரணி நடை­பெற்­றது. இதில் 100க்கும் மேற்­பட்­டோர் கலந்­து­கொண்டு ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் நோக்கி பேரணி சென்­ற­னர். தடையை மீறி நடத்­தப்­பட்ட விவ­சா­யி­க­ளின் இரு­சக்­கர பேர­ணியை போலிஸ் தடுத்­த­தால் தள்­ளு­முள்ளு ஏற்­பட்­டது. லேசான தடி­ய­டி­யும் நடத்­தப்­பட்­டது.

கட­லூ­ரில் டெல்லி போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக அனைத்­துக்­கட்சி சார்­பில் இரு­சக்­கர வாகன பேரணி நடை­பெற்­றது. இத­னை­யொட்டி, 200க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் கட­லூர் படை­வீ­ரர்­கள் மாளி­கை­யில் இருந்து பேர­ணி­யாக புறப்­பட்டு ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் நோக்கி பேரணி சென்­ற­னர். தஞ்­சை­யில் டெல்லி போராட்­டத்­துக்கு ஆத­ர­வாக விவ­சா­யி­கள் டிராக்­டர், மாட்­டு­வண்டி மற்­றும் இரு­சக்­கர வாக­னங்­களில் பேரணியாகச் செல்ல முயன்­ற­னர். தஞ்சை புற­

வ­ழிச்­சாலையில் சென்­ற­போது அவர்களை போலி­சார் தடுத்து நிறுத்­தி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. இதைத் தொடர்ந்து 4 டிராக்­டர்­களை மட்­டும் பேர­ணி­யாக செல்ல அனு­மதி வழங்­கி­னர்.

திருப்பூர் மாவட்டம் அவி­நா­சி­யில் அனைத்து விவ­சா­யி­கள் பாதுகாப்பு ஒருங்­கி­ணைப்புக் குழு சார்­பில் நேற்று இரு­சக்­கர வாக­னப் பேரணி நடைபெற்றது.

ஆட்­டை­யம்­பா­ளை­யத்­தில் துவங்கிய பேரணி, பழைய பேருந்து நிலை­யம் வழி­யாக புதிய பேருந்து நிலை­ யத்­தில் நிறை­வ­டைந்­தது.

நிறை­வாக, பேர­ணி­யில் பங்­கேற்­றோர் மூன்று வேளாண் மசோ­தாவை திரும்­பப் பெற வேண்­டும் என்­பன உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி முழக்கமிட்டு கலைந்து சென்­ற­னர்.

இதேபோல தரு­ம­புரி, சேலம், அரி­ய­லூர் என தமி­ழ­கம் முழு­வ­தும் பர­வ­லாக வாக­னப் பேரணி நடத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!