சட்டமன்றத் தேர்தல்: வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்.

கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல்ஹாசன் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் ஆறாவது பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

திமுகவின் வாகை சந்திரசேகர் வேளச்சேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக சரத்குமார் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!