திமுக எம்பி கனிமொழி கிருமித்தொற்றால் பாதிப்பு

சென்னை: சட்­ட­மன்­றத் தேர்­தலை முன்­னிட்டு, தமி­ழ­கம் முழு­வ­தும் தீவிர தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்டு வந்த திமுக மக­ளி­ரணி செய­ல­ரும், தூத்­துக்­குடி மக்­க­ள­வைத் தொகுதி உறுப்­பி­ன­ரு­மான கனி­மொழி (படம்) கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அவர் தன்னை வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­ட­தாக முதல்­கட்ட தக­வல்கள் வெளி­யாகி இருந்­தன.

இந்­நி­லை­யில், மருத்­து­வர் களின் பரிந்­து­ரை­யின்­படி சென்­னை­யி­லுள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் கனி­மொழி அனு­ ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரிவித்­துள்­ளன.

அண்மையில் மநீம வேட்பா ளர்கள் பொன்ராஜு, சந்தோஷ் பாபு ஆகியோர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிர­சா­ரம் செய்பவர்­கள் இப்படி தொடர்ந்து பாதிக்­கப்­பட்டு வரு­வது பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

திமுக மற்­றும் கூட்­ட­ணிக் கட்சி வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து திருநெல்­வே­லி­யில் பாளை­யங்­கோட்டை, ஆலங்­கு­ளம், சங்­க­ரன்­கோ­வில் உள்­ளிட்ட பகு­தி­களில் கனி­மொழி நேற்­று­ முன்­தி­னம் பிர­சா­ரம் செய்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் கிருமி பாதிப்பு கடுமையாக உயர்ந்து உள்ளதாகவும் நேற்று காலை வரை யிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,290 பேருக்கு கிருமி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ள தாகவும் கோவை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட 12 மாவட்டங்களில் கிருமி பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!