கார் மீது லாரி மோதியதில் பெண் போலிஸ் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அருகே தேர்தல் பணி மேற்கொள்ளச் சென்ற பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் போலிஸ் அதிகாரி மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மொத்தம் 3,998 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.

இன்றைய தேர்தலில் எவ்வித வன்முறைகளும் அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்கும் பொருட்டு, பாது காப்பு, கண்காணிப்புப் பணி களில் லட்சக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த தேர்தல் பணிகளில் ஈடுபடு வதற்காக வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி பறக்கும் படையினர் காரில் சென்றனர்.

அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி ஒன்று, பறக்கும் படையினரின் கார் மீது மோதியது. இவ்விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த வேலூர் வடக்கு காவல்நிலைய பெண் காவலர் மாலதி, 37, சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.

ஆம்புலன்சில் படுகாயமடைந்த மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கே.வி.குப்பம் காவல்துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!