சரத்குமார்: அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்ததற்கும் காசோலை வழக்கிற்கும் சம்பந்தம் கிடையாது

அதிமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததற்கும் காசோலை மோசடி வழக்குக்கும் சம்பந்தம் கிடையாது என நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமாருக்கு ஏழு வழக்குகளில் ஓராண்டு சிறைத் தண்டனையும் இரண்டு வழக்குகளில் அவரது மனைவி ராதிகாவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

நடிகர்கள் சரத்குமார்- ராதிகா தம்பதியர் பங்குதாரர்களாக இருக்கும் ‘மேஜிக் ப்ரேம்’ நிறுவனம் 2014ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்புக்காக ரேடியன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1.5 கோடியை பெற்றுவிட்டு, திருப்பிக்கொடுத்த காசோலைகள் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாக சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது ஆதாரங்களின் வாயிலாக உறுதிப்படுத்தப்படவே சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தக் காசோலை மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிறகு செய்தியாளர்களை சரத்குமார் சந்தித்தார். "அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்ததால் இது ஓர் அரசியல் சூழ்ச்சியா?" என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.

அதற்கு, ‘’இதை அரசியல் சூழ்ச்சி என்று கூறி நான் தப்பிக்க விரும்பவில்லை. சட்டத்தை மதிப்பவன் நான். என்னை பொறுத்தவரை இது சரியான தீர்ப்பு கிடையாது. இது காசோலை மோசடி வழக்கும் கிடையாது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளிவந்ததற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அப்படி சொல்லி நான் நழுவ பார்க்கவில்லை. இதைச் சட்ட ரீதியாக தீர்த்துக்கொள்வோம்,’’ என்று சரத்குமார் பதிலளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!