பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள 38 மாவட்­டங்­களில் சென்னை மாவட்ட மக்­கள்­தான் அதிக அள­வில் கிரு­மித்­தொற்று பாதிப்­புக்கு ஆளாகி உள்­ள­னர். சென்­னை­யில் இது­வரை இத்­தொற்­றால் ஆண்­கள் 59.71% பேரும் பெண்­கள் 40.29% பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி தெரி­வித்­துள்­ளது.

ஆண்­களில் குறிப்­பாக இளை ஞர்­கள்­தான் அதி­கம் பாதிக்­கப் படு­வ­தா­க­வும் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

சென்­னை­யில் அதி­க­மாக 30 முதல் 39 வய­தி­னர் 20.14%, 40 முதல் 49 வய­தி­னர் 18.37%, 50 முதல் 59 வய­தி­னர் 17.97%, 20 முதல் 29 வய­தி­னர் 17.93%, 60 முதல் 69 வய­தி­னர் 11.13% பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேக­மெ­டுத்து வரு­கிறது.

தமி­ழ­கத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 4,276 பேர் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள னர். இவர்­களில், அதி­க­பட்­ச­மாக சென்­னை­யில் 1,459 பேர் பாதிக்­கப்பட்­ட­னர். ஆறு பேர் மர­ணம் அடைந்­த­னர்.

இது­வரை சென்­னை­யில் 2,57,851 பேர் இத்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். இவர்­களில், 2,42,880 பேர் நன்கு குண­ம­டைந்­துள்­ள­னர். 10,685 பேர் தற்­போது சிகிச்சை பெற்று வரு­கின்றனர். இது­வரை 4,286 பேர் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

கொரோனா பர­வல் அதி­க­ரித்து வரு­வ­தால் சென்­னை­யில் உள்ள 200 வார்­டு­க­ளி­லும் மாந­க­ராட்சி சுகா­தாரப் பணி­யா­ளர்­கள் வீடு வீடாகச் சென்று பொது­மக்­க­ளுக்கு காய்ச்­சல் பரி­சோ­தனைகளை மேற்­கொண்­டு வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!