கோட்டை கட்ட உதவிய செங்கல் உத்தி

சென்னை: தமி­ழ­கத்­தின் 16வது சட்­ட­மன்­றத் தேர்­த­லில் முதன் முதலாகக் களம் இறங்­கிய திமுக இளை­ஞ­ரணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டா­லின் பர­வ­லா­கப் பேசப்­படும் பிர­மு­க­ராக ஆகி இருக்­கி­றார்.

திமு­க­வில் இளை­யர்­களை அரவணைக்­கும் சக்­தி­யா­கக் கரு­தப்­படும் அவர், கடந்த மார்ச்­சில் தேர்­தல் பிர­சா­ரம் செய்­த­போது புது பாணி­யைக் கையில் எடுத்­தார்.

"மதுரை அருகே எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னையை உருவாக்­கப்போவ தாக மத்­திய பாஜக அரசு உறுதி அளித்­தது. 2019ல் அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.

"ஆனால் எந்த வேலை­யும் நடக்­க­வில்லை," என்று உத­ய­நிதி புகார் தெரிவித்தார். தான் அங்கு சென்­ற­போது ஒரு செங்­கல்லை மட்­டுமே அந்த இடத்­தில் காண­மு­டிந்­தது என்று சொல்லி 'AIIMS' என்ற பெயர் பொறிக்­கப்­பட்டு இருந்த செங்­கல்லை எடுத்­துக் காட்டி மத்­திய அர­சை­யும் அதற்குத் துணை போகும் மாநில அதிமுக அர­சை­யும் நம்­பா­தீர்­கள் என்று பொது­மக்­களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்­டார்.

அத்தகைய புதிய பாணி பிர­சா­ரம் எடுப்­பாக பேசப்­பட்­டது. மற்­ற­வர்­களைப் போல் அல்­லாது உத­ய­நிதி வேறு­பட்ட அர­சி­யல் உத்­தி­யைக் கையில் எடுப்­ப­தாக கவ­னிப்­பா­ளர்­கள் கரு­தி­னர்.

திமு­க­வின் முன்­னாள் தலை­வர் மு கரு­ணா­நி­தி­யின் பேர­னும் இன்­னாள் தலை­வர் முக ஸ்டா­லினின் மக­னு­மான உத­ய­நிதி ஸ்டா­லின், தன் தாத்தா போட்­டி­யிட்ட சேப்­பாக்­கம்-திரு­வல்­லிக்­கேணி தொகு தி­யில் பிரம்­மாண்ட வெற்றி பெற்று அர­சி­யல் அத்­தி­யா­யத்­தைத் தொடங்கி இருக்­கி­றார்.

வெற்றிக் களிப்­பு­டன் ஸ்டாலினை அவர் சந்­தித்­தார். தேர்­த­லில் திமுக கட்டி உள்ள வெற்றிக் கோட்­டைக்குத் தனது செங்­கல் உத்தி உதவி உள்ளதைப் புலப்­படுத்­தும் வகை­யில் AIIMS பெயர் பொறிக்­கப்­பட்ட செங்­கல்லை ஸ்டா­லி­னி­டம் உத­ய­நிதி வழங்­கி­னார்.

உதயநிதியின் உத்தி பேசப்படு வதாக ஊடகங்கள் கூறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!