ஒத்துழையுங்கள், ஆலோசனைகளை கூறுங்கள்; பழைய முதல்வருக்கு புதிய முதல்வர் கோரிக்கை

சென்னை: நடந்து முடிந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அறுதிப் பெரும்­பான்­மை பெற்று திமுக தலை­வர் ஸ்டா­லின் முதல்­வர் ஆவதை அடுத்து அதி­முக முதல்­வ­ராக இருந்த எடப்­பாடி பழ­னி­சாமி அந்தப் பத­வி­யில் இருந்து நேற்று விலகி­விட்­டார்.

புதிய முதல்­வ­ரா­கப் பதவி ஏற்­கும் ஸ்டா­லி­னுக்கு வாழ்த்து தெரி­வித்து பழ­னி­சாமி டுவிட்­ட­ரில் செய்தி வெளி­யிட்­டார்.

"தமிழ்­நாட்­டின் முதல்­வ­ராக பதவி­ ஏற்­க­வுள்ள மு.க. ஸ்டா­லின் அவர்­க­ளுக்கு என்­னு­டைய நல்­வாழ்த்­துக்­களைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்," என்று அந்­தச் செய்­தியில் பழ­னி­சாமி கூறினார்.

உட­ன­டி­யாக பழ­னி­சா­மிக்கு டுவிட்­டர் மூலம் நன்றி தெரி­வித்த ஸ்டா­லின், அவ­ருக்குச் சில வேண்டுகோள்­க­ளை விடுத்­தார்.

"எடப்­பாடி பழ­னி­சாமி அவர்­களுக்கு என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். மிகச் சிறந்த தமி­ழ­கத்தை உரு­வாக்க தங்­க­ளது ஆலோ­ச­னை­யும் ஒத்­து­ழைப்­பும் தேவை.

ஆளும் கட்­சி­யும் எதிர்க்­கட்­சி­யும் இணைந்­ததே ஜன­நா­ய­கம். அத்­த­கைய ஜன­நா­ய­கம் காப்­போம்," என்று அந்­தச் செய்­தி­யில் புதிய முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்து இருக்­கி­றார்.

பழைய, புதிய முதல்­வர்­க­ளின் இந்த அணு­கு­முறை தமி­ழக அர­சி­ய­லில் பெரி­தும் வர­வேற்­கப்­படும் ஒன்­றாக இருக்­கிறது என்று கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கி­றார்­கள்.

நாக­ரிக­மான அர­சி­யலை நடத்த இரு பெரும் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் தயா­ராக இருக்­கி­றார்­கள் என்­ப­தையே இது உணர்த்­து­வ­தாக அவர்­கள் தெரி­விக்­கி­றார்­கள்.

அர­சி­ய­லில் எப்­போ­துமே கண்­ணி­ய­மான அணு­கு­மு­றையே இந்த இரு தலை­வர்­க­ளின் விருப்­ப­மாக இருந்து வந்­துள்­ள­தை­யும் கவ­னிப்­பா­ளர்­கள் சுட்­டிக்­காட்­டு­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!