ஊடகத்துறையினரும் முன்களப் பணியாளர்களாக கருதப்படுவர் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமி­ழ­கத்­தில் இனி ஊட­கத் துறை­யி­ன­ரும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­வர் என திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கான உரி­மை­களும் சலு­கை­களும் ஊட­கத் துறை­யி­ன­ருக்­கும் உரிய முறை­யில் வழங்­கப்­படும் என ஓர் அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

கொரோனா அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யில் செய்தி சேக­ரிக்­கும் பணி­யில் ஊட­கத் துறை­யி­னர் ஈடு­பட்­டுள்­ள­னர்.

முக்­கிய செய்­தி­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­ப­து­டன் கொரோனா குறித்த விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வ­தி­லும் ஊட­கத் துறை­யி­னர் முக்­கி­யப் பங்கு வகிக்­கின்­ற­னர்.

இத­னால் தங்­க­ளை­யும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளா­கக் கரு­த­வேண்­டும் என அவர்­கள் கோரிக்கை விடுத்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில் அடுத்த முதல்­வ­ரா­கப் பொறுப்­பேற்க உள்ள மு.க. ஸ்டா­லின், ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளின் கோரிக்­கையை ஏற்­றுக் கொண்­டுள்­ளார்.

மேற்கு வங்­கம் உள்­ளிட்ட பல மாநி­லங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அனை­வ­ரும் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்­ற­னர்.

‘‘மகத்­தான மக்­க­ளாட்­சி­யின் மாண்­பிற்கு நான்­கா­வது தூணாய் விளங்­கு­வது ஊட­கத் துறை. செய்­தி­களை மக்­க­ளி­டம் உட­னுக்­கு­டன் கொண்டு சேர்த்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் தலை­யாய பணியை ஊட­கங்­கள் மேற்­கொண்டு வரு­கின்­றன. அதற்­காக அய­ராது உழைக்­கின்­றன.

“கடும் மழை­யி­லும் கொளுத்­தும் வெயி­லி­லும் பெருந்­தொற்று வேளை­யி­லும் உயி­ரைப் பண­யம் வைத்து உழைக்­கும் ஊட­கத் துறை­யி­னர் முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளா­கத் தமி­ழ­கத்­தில் கரு­தப்­ப­டு­வார்­கள். செய்­தித்­தாள்­கள், காட்சி ஊட­கங்­கள், ஒலி ஊட­கங்­கள் போன்­ற­வற்­றில் பணி­யாற்றி வரு­கின்ற தோழர்­கள் அனை­வ­ருமே இந்த வரி­சை­யில் அடங்­கு­வார்­கள். முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­கான உரி­மை­களும் சலு­கை­களும் அவர்­க­ளுக்கு உரிய முறை­யில் வழங்­கப்­படும்,” என மு.க.ஸ்டா­லின் தமது அறிக்கையில் தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!